India vs New Zealand Women U-19 World Cup semifinal Highlights in tamil: பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா ப்ளிம்மர் 35 ரன்கள் எடுத்தார். பல வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offerதொடர்ந்து 108 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத் அரைசதம் விளாசி 61 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீராங்கனைகளையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் கொண்ட இலக்கை இந்தியா எட்டிப்பிடித்தது. இதனால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அபரா வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
#TeamIndia march into the Finals of the #U19T20WorldCup.
— BCCI Women (@BCCIWomen) January 27, 2023
They become the first team to reach the finals of the inaugural #U19T20WorldCup 💪💥👏
Way to go #WomenInBlue! pic.twitter.com/4H0ZUpghkA
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றியை ருசிக்கும் அணியுடன் இந்தியா வருகிற 29 ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil