மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது. Bangladesh complete two runs off the last ball and they win their maiden #AsiaCup title after beating India by 3…

By: Updated: June 10, 2018, 07:28:53 PM

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில், இன்று நடந்த இறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், சல்மா காதுன் தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். தொடக்க வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 11 ரன்னிலும், ஸ்மிரிதி மந்தனா 7 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் கவுர் மட்டும் நிலைத்து நின்று 42 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் 15 ரன் கூட தாண்டவில்லை. இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் மட்டும் எடுத்தது,

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம், கடைசி ஓவரின் கடைசி பந்தில்(19.5) 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றிப் பெற்றது. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து கோப்பையைக் கைப்பற்றியது. முதன்முறையாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்கதேச மகளிர் அணி, முதன் முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Womens asia cup bangladesh pull off thrilling last ball finish to register historic win over india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X