மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், வினிஃப்ரெட் துரைசிங்கம் தலைமையிலான மலேசிய அணியும் மோதின.
இதில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை மித்தாலி ராஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். கேப்டன் ஹர்மன்ப்ரீத் 23 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மலேசிய அணி, 13.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 27 ரன்களில் சுருண்டது. ஆறு வீராங்கனைகள் 0 ரன்னில் அவுட்டானார்கள். ஒருவர் கூட இரட்டை இலக்கை தாண்டவில்லை.
Summary of India’s first game against Malaysia
India won by 142 runsMithali Raj 97* (69)
Harmanpreet Kaur 32 (23)
Pooja Vastrakar 16 & 3/6
Poonam Yadav 2/0
Anuja Patil 2/9
Shikha Pandey 1/2#INDvMAL #AsiaCup #WAC2018— BCCI Women (@BCCIWomen) 3 June 2018
இதனால் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப் பெற்றது.