AUS vs SA LIVE Streaming Tamil News: 8-வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்க மண்ணில் நடந்து வருகிறது. இந்நிலையில், இத்தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஆவரமாக உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா: போட்டி விவரங்கள்
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா பெண்கள் இடையேயான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை பிப்ரவரி 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் இடையேயான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்போது தொடங்கும்?
ஆஸ்திரேலியா பெண்கள் மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு (IST) தொடங்குகிறது. டாஸ் மாலை 6 மணிக்கு (IST) போடப்படும்.
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா: லைவ் ஸ்ட்ரீமிங்
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப்-பில் மற்றும் இணையதளத்தில் நேரலையில் பார்க்கலாம். போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil