கோங்காடி த்ரிஷாவின் ஆல்ரவுண்ட் ஷோ, தென்னாப்பிரிக்காவை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி U-19 பெண்கள் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்தியா வெல்ல உதவியது.
ஆங்கிலத்தில் படிக்க: Women’s U-19 T20 World Cup Final: India beat South Africa to win the title
த்ரிஷா தனது லெக்-ஸ்பின் பந்துவீச்சில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார், பின்னர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்தியாவை வெற்றிப் பெறச் செய்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா கேப்டன் கெய்லா ரெய்னேக் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் தென்னாப்பிரிக்கா தடுமாறியது. தென்னாப்பிரிக்கா அணியில் மைக் வான் வூர்ஸ்ட் (18 பந்துகளில் 23), ஜெம்மா போத்தா (14 பந்துகளில் 16), ஃபே கோவ்லிங் (20 பந்துகளில் 15) ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 82 ரன்களுக்குள் சுருண்டது.
இந்தியா சார்பில் கோங்காடி த்ரிஷா (3/15), பருணிகா சிசோடியா (2/6), ஆயுஷி சுக்லா (2/9), வைஷ்ணவி ஷர்மா (2/23), ஷப்மான் ஷகில் (1/7) ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றினர்.
இலக்கை துரத்திய இந்தியா 11.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்தியா தொடக்கத்தில் ஜி கமலினியை 8 ரன்களில் இழந்தது, ஆனால் த்ரிஷா மற்றும் சானிகா சால்கே (26 நாட் அவுட்) இரண்டாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் சேர்த்தனர்.
19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்த த்ரிஷா, தொடரின் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.