/tamil-ie/media/media_files/uploads/2018/11/a39.jpg)
உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டி: 6வது தங்கம் வென்ற மேரி கோம்
10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம், 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
What an inspiration @MangteC ! Congratulations on the historic 6th GOLD #MaryKompic.twitter.com/d3wuHNy319
— Mohammad Kaif (@MohammadKaif) 24 November 2018
35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில், 7-வது பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே, 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். தற்போது, மீண்டும் ஆறாவது முறையாக மேரி கோம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
Photos Credit: Renuka Puriமேரி கோமை அடுத்து மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா, 57 கிலோ எடைப்பிரிவில் இறுதி போட்டியில் முதல் முறையாக இறுதிக்கு நுழைந்த ஜெர்மன் வீராங்கனை ஆர்னெலா வாஹ்னரைச் சந்திக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us