‘இங்கிலாந்தின் ‘Belter’ பிட்ச்களில் இவர்கள் இல்லையெனில் கதை முடிந்தது’! – 10 அணிகளின் ஆல் ரவுண்டர்ஸ் யார் யார்?

World Cup 2019: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர் வரும் மே-30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் கோதாவில் குதித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது முழு பென்ச் ஸ்ட்ரென்த்தை களமிறக்கியுள்ளது. மேலும் படிக்க – ‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்!’ –…

By: Updated: May 26, 2019, 6:46:49 PM

World Cup 2019: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர் வரும் மே-30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் கோதாவில் குதித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது முழு பென்ச் ஸ்ட்ரென்த்தை களமிறக்கியுள்ளது.

மேலும் படிக்க – ‘விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்!’ – வங்கதேச கேப்டன் மோர்டசா

இங்கிலாந்து மாதிரியான கண்டிஷனில் விளையாடும் போது, ஆல் ரவுண்டர்களை கணிசமாக இறக்குவது அவசியம். ஏனெனில், இங்குள்ள பிட்சுகளின் தன்மை அப்படி. ரன்களை அடித்து நொறுக்கும் ‘Belter’ பிட்சுகளாக இருந்தாலும் சரி, லோ ஸ்கோரிங் பிட்ச்களாக இருந்தாலும் சரி, இங்கு அணிகள் வெற்றிப் பெற வேண்டுமெனில் ஆல் ரவுண்டர்களின் பங்கு மகத்தானதாக அமைகிறது.

அதன்படி, உலகக் கோப்பைத் தொடரில் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான்

முகமது நபி, சமியுல்லா ஷின்வாரி, ரஹ்மத் ஷா

இலங்கை

ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, தனஞ்செயா டி சில்வா, ஜீவன் மெண்டிஸ், இசுறு உதானா, மிலிந்தா சிரிவர்தனே

ஆஸ்திரேலியா

கிளென் மேக்ஸ்வெல், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ்.

தென்னாப்பிரிக்கா

ஆண்டிலேயே பெலுக்வாயோ, ஜேபி டுமினி, க்றிஸ் மோரிஸ்

வெஸ்ட் இண்டீஸ்

ஜேசன் ஹோல்டர், ஆந்த்ரே ரசல், கார்லஸ் பிரத்வெயிட்

வங்கதேசம்

ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, மெஹிதி ஹசன், மொசாடெக் ஹொசைன், முஹம்மத் சைஃபுதீன்

பாகிஸ்தான்

முஹம்மது ஹபீஸ், இமாத் வாசிம், சோயப் மாலிக், ஹாரிஸ் சோஹைல்

நியூசிலாந்து

மிட்சல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், காலின் மன்ரோ

இந்தியா

ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ்

இங்கிலாந்து

பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, க்றிஸ் வோக்ஸ், லியாம் டாசன், டாம் குர்ரன்

எந்த அணி பலமான ஆல் ரவுண்டர்களை கொண்டிருகிறது? உங்கள் சாய்ஸ் எந்த அணிக்கு?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:World cup 2019 all rounders list in each teams

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X