'கிரிக்கெட் என்றாலே பாரதம்': கர்நாடக இசையில் உலகக் கோப்பை பாடல்
இசைப் பிரபலங்களான பால்காட் ஆர் ராம்பிரசாத், ரகுராம், பின்னணிப் பாடகர் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் சிக்கில் சி குருச்சந்திரன் ஆகியோர் இணைந்து 'கிரிக்கெட் என்றாலே பாரதம்' என்ற கர்நாடக இசை உலகக் கோப்பை பாடலை வெளியிட்டுள்ளனர்.
Worldcup 2023 | indian-cricket-team:13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
Advertisment
அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடக்கும் 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
கர்நாடக இசையில் உலகக் கோப்பை பாடல்
இந்நிலையில், கிரிக்கெட்டின் உற்சாகத்தையும், 2023 ஐ.சி.சி உலகக் கோப்பையையும் கொண்டாடும் வகையில், இசைப் பிரபலங்களான பால்காட் ஆர் ராம்பிரசாத், ரகுராம், பின்னணிப் பாடகர் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் சிக்கில் சி குருச்சந்திரன் ஆகியோர் இணைந்து 'கிரிக்கெட் என்றாலே பாரதம்' என்ற கர்நாடக இசை உலகக் கோப்பை பாடலை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக ராகங்களின் வலுவான தாக்கத்தைக் கொண்ட இந்தப் பாடலில், இசை ஆர்வலர்கள் ரசித்து, தட்டிக் கேட்கும் நவீன மென்மையான குறிப்புகளும் உள்ளன. தற்போது இந்தப் பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.