ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் சென்னையில் மழை வரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1983 மற்றும் 2011ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிறது. அதேவேளையில் ஹாட்ரிக் உள்பட 5 முறை பட்டம் வென்று குவித்துள்ள ஆஸ்திரேலிய அணி வேகபந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைமையில் களம் காண்கிறது. இந்திய அணியானது ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற நிலையில். உலகக்கோப்பையிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தமிழகம் முழுவதிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சென்னையிலும் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
கடந்த சில வாரங்களாக சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“