உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதிவருகின்றன. இந்தப் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
48 ஓவர்கள் தாக்குப்பிடித்த நெதர்லாந்து; 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
உலக கோப்பை இன்றைய போட்டியில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்தது.
411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட நெதர்லாந்து 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
38 ஓவரில் 172 ரன்கள் எடுத்த நெதர்லாந்து; வெற்றிக்கு இத்தனை ரன்கள் தேவை
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு நெதர்லாந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. நெதர்லாந்தின் வெற்றிக்கு 72 பந்துகளில் 236 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன.
நெதர்லாந்து நிதான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிராக போட்டியில் நெதர்லாந்து நிதானமாக ஆடி வருகிறது. 9.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் வெற்றிக்கு 355 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.
இந்தியா 410 ரன்கள் குவிப்பு; ஸ்ரேயாஸ், ராகுல் சதம்
இன்றைய உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 410 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் மற்றும் ராகுல் சதம் அடித்துள்ளனர்.
5 வீரர்கள் அரைசதம்: இந்தியா புதிய சாதனை
பெங்களூருவில் நடைபெற்று வரும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்னனர்.
50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி உள்ளனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது நிகழ்வு ஆகும்.
விராத் கோலி அரை சதம்
நெதர்லாந்துக்கு எதிராக இன்றைய போட்டியில் இந்திய அணி 28 ஓவரில் 198 ரன்கள் குவித்துள்ளது. விராத் கோலி 71வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்ரேயாஷ் ஐயர் 24 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ரோஹித் ஷர்மா- சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர். ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்துள்ளது இந்தியா. சுப்மன் கில் ஆட்டம் இழந்தார்.
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிகெட் இறுதிகட்டத்தை ஏட்டி உள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை நெதர்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை பெங்களூரில் எதிர்கொள்கிறது.
இந்திய அணி 8 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் நெதர்லாந்து அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி 6 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த ஆட்டம் இன்று இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“