/tamil-ie/media/media_files/uploads/2023/08/delhi-metro-rail.jpg)
சென்னை மெட்ரோ, கிரிக்கெட் ரசிகர்கள் நள்ளிரவு 12 மணிவரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
World Cup 2023 Special trains in Chennai: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடந்துவருகின்றன. இந்த நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.8) நடைபெறுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் எளிதில் செல்லும்வகையில் சென்னை மெட்ரோவில் இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள சென்னை மெட்ரோ, கிரிக்கெட் ரசிகர்கள் நள்ளிரவு 12 மணிவரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
இதற்கிடையில் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் எளிதில் அணுகும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் வேளச்சேரி- சிந்தாதிரிபேட் என அக்.8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
வேளச்சேரி-சிந்தாதிரிபேட்-வேளச்சேரி சிறப்பு பயணிகள் ரயில்
வேளச்சேரி-சிந்தாதிரிபேட் பயணிகள் | ரயில் ரயில் நிலையம் | சிந்தாரிதிபேட்-வேளச்சேரி சிறப்பு ரயில் |
22.40 | வேளச்சேரி | 00.05 |
22.43 | பெருங்குடி | 23.55 |
22.45 | தரமணி | 23.53 |
22.48 | திருவான்மியூர் | 23.50 |
22.49 | இந்திரா நகர் | 23.49 |
22.51 | கஸ்தூர்பா நகர் | 23.47 |
22.53 | கோட்டூர்புரம் | 23.45 |
22.55 | கிரீன்வேஸ் ரோடு | 23.43 |
22.57 | மந்தவெளி | 23.41 |
22.59 | திருமயிலை | 23.39 |
23.00 | முண்டக்கன்னி அம்மன் கோவில் | 23.38 |
23.04 | லைட் ஹவுஸ் | 23.34 |
23.06 | திருவல்லிக்கேணி | 23.32 |
23.08 | சேப்பாக்கம் | 23.30 |
23.15 | சிந்தாதிரிபேட் | 23.20 |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.