WorldCup 2023 Warm-Up Match India-vs-England Live Score: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த முதலாவது போட்டியில் இலங்கையை வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. திருவனந்தபுரத்தில் நடக்கவிருந்த தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. ஐதராபாத்தில் நடந்த பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3வது போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (சனிக்கிழமை ) நடக்கும் 4வது பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தும் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க:- India vs England Live Score, World Cup 2023 Warm-Up Match
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
டாஸ் முடிந்த நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து மழை பெய்ததால், ஒரு ஒவர் கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடும் லெவன்
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி
இங்கிலாந்து:
டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், டேவிட் வில்லி, அடில் ரஷித், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி, மார்க் வூட்
இந்த ஆட்டத்தில் அணியில் உள்ள 15 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கும்.
இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இடம்பிடித்துள்ள இளம் பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கின் பேட்டிங்கை அந்த அணி நிர்வாகம் சோதிக்கும். இதேபோல் மற்ற பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவார்கள்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டா ர் ஸ்போர்ட்ஸ் 1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
திருவனந்தபுரத்தில் நடக்கும் 5வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் (பிற்பகல் 2 மணி) மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“