Advertisment

இங்கிலாந்து உலககோப்பை சாம்பியன் ஆக காரணமான அந்த ஓவர்...: டுவிட்டராட்டிகள் விவாதம்

England champion : சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளுமே 15 ரன்கள் எடுத்ததால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, england, champion, super over, new zealand, final, ben stokes, உலககோப்பை கிரிக்கெட், இங்கிலாந்து, சாம்பியன், சூப்பர் ஓவர், நியூசிலாந்து, இறுதிப்போட்டி

worldcup cricket, england, champion, super over, new zealand, final, ben stokes, உலககோப்பை கிரிக்கெட், இங்கிலாந்து, சாம்பியன், சூப்பர் ஓவர், நியூசிலாந்து, இறுதிப்போட்டி

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் சம ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.. சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளுமே 15 ரன்கள் எடுத்ததால், அதிக பவுண்டரிகளின் அடிப்படையில், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

வரலாறுக்கு மேல் வரலாறு : உலககோப்பை இறுதி போட்டியில், ஆட்டம் டை ஆனது இதுவே முதல்முறை. இதனிடையே வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. அந்த சூப்பர் ஓவரிலும், இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்ததால், அந்த ஆட்டமும் டை ஆனது. இதனையடுத்து, அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்து சாம்பியன் ஆக அறிவிக்கப்பட்டது.

பரபரப்பான 50வது ஓவர்

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. பவுல்ட் வீசிய 50வது ஓவரின் முதல் 2 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தை, ஸ்டோக்ஸ் சிக்சராக மாற்றினார். லார்ட்ஸ் மைதானமே உற்சாகத்தில் துள்ளிக்குதித்ததில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதுபோன்ற சூழ்நிலை அங்கு நிலவியது. அந்தளவிற்கு மைதானத்திற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நான்காவது புந்தில் 2வது ரன்னுக்கு ஓடியபோது குப்டில் எறிந்த பந்து, ஸ்டோக்சின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதனையடுத்து 6 ரன்கள் வழங்கப்பட்டன. 5வது பந்தில் 2வது ரன்னுக்கு ஓடிய ரஷித் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2வது ரன்னுக்கு ஓடிய மார்க் வுட் ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க, போட்டி டை ஆனது.

சூப்பர் ஓவர்

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பவுல்ட் வீசிய முதல் பந்தில் 3 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ், 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். மறுமுனையில் அசத்திய பட்லர், கடைசி 2 பந்தில் 6 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது.

பின் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், நியூசிலாந்தின் குப்டில், நீசம் களமிறங்கினர். இங்கிலாந்தின் ஆர்ச்சர், நீஷம் 2வது பந்தில் சிக்சர் அடித்தார். அடுத்த 3 பந்தில் நீசம் 5 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது ரன்னுக்குஓடிய குப்டில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில், இங்கிலாந்து அணி ( 26 பவுண்டரிகள்) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக தன்வசப்படுத்தியது. நியூசிலாந்து அணி ( 17 பவுண்டரிகள்) இரண்டாவது இடத்தை பெற்று ஆறுதல் தேடிக்கொண்டது.

டுவிட்டராட்டிகள் விமர்சனம்

ஆண்ட்ரூ பிடல் பெர்னாண்டோ

விக்கெட்களை அடிப்படையாக கொள்ளாமல், அதிக பவுண்டரிகள் மூலம் வெற்றியாளரை தீர்மானித்தது எந்த லாஜிக்கோ...

அதற்கு பதில் அளித்துள்ள ஜோனாதன் செல்வராஜ்

சில சமயம் ஒரே விக்கெட்கள் கூட நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கும் என்பதால், பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரைடன் கோவர்டேல்

உலககோப்பை சாம்பியன் தீர்மானிக்கப்பட்டது பவுண்டரிகளின் அடிப்படையில், விக்கெட்களின் அடிப்படையில் அல்ல.

இனிமேல், சொல்லாதீர்கள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கன் ஆட்டம் அல்ல என்று.........

England Live Cricket Score New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment