Gary Kirsten | Pakistan: உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேரி கிர்ஸ்டனை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவித்தது.
2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியுடன், எம்.எஸ் தோனி தலைமையிலான அணியுடன் கேரி கிரிஸ்டன் இதற்கு முன் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றிகரமான இருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பயற்சியாளராகும் அவரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பயற்சியாளராகும் பொறுப்பை தான் ஏன் ஏற்றுக்கொண்டேன்? என்பது தொடர்பாக முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விளக்கமளித்துள்ளார்.
"பாகிஸ்தான் ஒயிட்-பால் அணியை ஒன்றிணைப்பதே எனது முதன்மையான நோக்கம். பாகிஸ்தான் ஆடவர் தேசிய அணிக்கு ஒயிட்-பால் கிரிக்கெட்டில் பயிற்றுவிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதும், சில காலத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மீண்டும் இணைவதும் ஒரு மிகப்பெரிய மரியாதை.
20 ஓவர் கிரிக்கெட்டில், அணித் தேர்வுகளில் முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்துவோம். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற நிலையான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கிரிக்கெட்டின் அம்சங்களில் ஒன்று அதன் உலகளாவிய தன்மையாகும். கலாச்சாரங்கள் முழுவதும், விளையாட்டைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு பகிரப்பட்ட புரிதல் உள்ளது. பாகிஸ்தான் ஆடவர் ஒயிட்-பால் அணியை ஒருங்கிணைத்து, அவர்களின் கணிசமான திறமைகளை ஒரு பொதுவான குறிக்கோளை நோக்கிப் பயன்படுத்தி, வெற்றியை அடைவதே எனது குறிக்கோள்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“