Advertisment

வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா... WTC தரவரிசையில் தற்போதைய நிலை என்ன?

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற பின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
World Test Championship Where does India stand after whitewashing Bangladesh 2 0 Tamil News

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (62.50 சதவீதம்), 3வது இடத்தில் இலங்கையும் (55.56 சதவீதம்) உள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: World Test Championship: Where does India stand after whitewashing Bangladesh 2-0?

இதனையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றி, வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. 

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற பின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா (74.24 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது.தொடரை இழந்த வங்கதேசம் (34.38 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. 

இந்தப்பட்டியலில் 2-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (62.50 சதவீதம்), 3வது இடத்தில் இலங்கையும் (55.56 சதவீதம்) உள்ளன. 4 முதல் 6 இடங்களில் முறையே இங்கிலாந்து (42.19 சதவீதம்), தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்), நியூசிலாந்து (37.50 சதவீதம்) அணிகள் உள்ளன. 8 மற்றும் 9வது இடங்களில் முறையே பாகிஸ்தான் (19.05 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

World Test Championship India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment