England vs Australia Semi-Final 2 Live Telecast: உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இன்று (11ம் தேதி) மோதுகின்றன.
இந்த போட்டி, இந்திய நேரப்படி மதியம் 3மணியளவில், இங்கிலாந்தின் எட்ஸ்பாக்ஸ்டன் மைதானத்தில் துவங்க உள்ளது.
ஐந்து முறை உலககோப்பையை ( 1987,1999,2003,2007 மற்றும் 2015) வென்றுள்ள ஆஸ்திரேலியா, ஆறாவது முறையாக கோப்பையை வெல்லும் பொருட்டு, அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.
கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இதுவரை 3 உலககோப்பைகளில் இறுதிப்போட்டிகளுக்கு தகுதிபெற்றபோதிலும், ஒருமுறை கூட, கோப்பையை வெல்லாதது வருந்தத்தக்க விஷயந்தான்.
இன்றைய போட்டியில், வெற்றி பெறும் அணி, 14ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
போட்டி நடக்குமா? - என்ன சொல்கிறது வானிலை
மழையால், 2 நாட்களாக நடந்த முதல் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் வெற்றி கானல்நீரானது. அதுபோல, இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி துவங்க உள்ளது. மாலை 6.30 மணியளவில் மழை பெய்ய 50 சதவீத வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காற்றின் ஈரப்பதம் 80 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் வீரர்கள் சிரமப்படுவர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (11ம் தேதி) மழையால் போட்டி தடைபடுமாயின், நாளை (12ம் தேதி) போட்டி நடைபெறும். நாளையும் மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை என்றால், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.
போட்டியை நேரலையாக டிவியில் காண
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி
இணையதளத்தில் நேரலையாக காண
ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்
லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்…