ICC World Cup 2019, Australia Vs England Score Updates: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இங்கிலாந்து அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் ஐந்து முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து, 32.1வது ஓவரில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 226 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்றது.
பர்மிங்காமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வோக்ஸ் 'வேகத்தில்' ஆபத்தான வார்னர் (9) சிக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்டங்கண்டது. கவாஜாவுக்குப்பதில் வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் (4) ஏமாற்ற, 14 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி பொறுப்புடன் விளையாடினர்.இவர்கள், அணியை சரிவிலிருந்து மீட்டனர்.ரஷித் 'சுழலில்'கேரி (46), ஸ்டாய்னிஸ் (0) அவுட்டாகினர்.ஸ்மித் அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் (22) ஒரு சிக்சர் விளாசிய திருப்தியில் கிளம்பினார். வோக்ஸ் 'வேகத்தில்' ஸ்மித் (85), ஸ்டார்க் (29) சிக்கினார். ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகள் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தபோது, பேர்ஸ்டோவ் (34) ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய ஜேசன் அரை சதம் விளாசினார். ஆனால், 85 ரன்களில் அம்பயரின் தவறான தீர்ப்பால் அவுட்டானார். கேப்டன் மார்கன், ஜோ ரூட் இணைந்து வெற்றியை எளிதாக்கினர். மார்கன் பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜூலை 14ல் லார்ட்சில் நடக்கும் பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து மோதுகின்றன. இதில் வெல்லும் அணி புதிய உலக சாம்பியனாக உருவெடுக்கும்.
Live Blog
AUS vs ENG Score: Australia Vs England Scorecard Updates, Edgbaston, Birmingham - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து கிரிக்கெட், உலகக் கோப்பை 2019 2வது அரையிறுதிப் போட்டி
1975 - 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வெற்றி
1987 - 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் வெற்றி
1996 - 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வெற்றி
1999 - தென்னாப்பிரிக்காவுடன் டை
2003 - 48 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வெற்றி
2007 - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் வெற்றி
2015 - 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வெற்றி
2019 - இங்கிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
முன்கூட்டியே இப்படிச் சொல்வது சற்று அதிகப்படியாக இருக்கலாம். ஆனால், 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இவ்விரு அணியும் இதற்கு 50 ஓவர் உலகக் கோப்பையே வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், வரலாற்றில் முதன் முறையாக, இவ்விரு அணிகளில் ஏதோ ஒன்று உலகக் கோப்பையை வெல்லப் போகிறது.
அது நியூசிலாந்தா, இங்கிலாந்தா என்பதே பெரும் சஸ்பென்ஸ்.
25 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 53 ரன்களே தேவை. உலகக் கோப்பை அரையிறுதியில், நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா இவ்வளவு மோசமாக தோல்வியை சந்திக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதிலும், இவ்வளவு விரைவில் அடிபணியும் என்று இங்கிலாந்தே நினைத்திருக்காது.
அத்தனை பெருமையும், இங்கிலாந்தின் அதிரடி ஓப்பனர்ஸ்களையே சாரும். குறிப்பாக, காட்டடி ஜேசன் ராய்க்கு!!
ஸ்டீவன் ஸ்மித் வீசிய 15.3, 15.4, 15.5 என்று வரிசையாக மூன்று பந்துகளிலும், ஜேசன் ராய் சிக்ஸர்கள் விளாசினார். அதிலும், கடைசி சிக்ஸ் மெகா.. மெகா அடி எனலாம். ஜேசன் ராய் ஆட்டத்தை ஆஸி., பவுலர்களால் துளியும் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜேசன் 50!! மிட்சல் ஸ்டார்க் உள்ளிட்ட அனைத்து ஆஸி., பவுலர்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஆடி வரும் ஜேசன் ராய், அரைசதம் விளாசி இருக்கிறார். இப்போது இங்கிலாந்து அடிக்கும் அடியைப் பார்த்தால், இங்கிலாந்து 35 ஓவர்களிலேயே வென்றுவிடுவார்கள் போலிருக்கிறது.
பேர்ஸ்டோ 2வது கியரில் சென்றுக் கொண்டிருக்க, ஜேசன் ராய் நான்காவது கியரில் பட்டையைக் கிளப்புகிறார். 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என அரைசதத்தை நோக்கி ஜேசன் ராய் பயணப்பட, வெற்றியை நோக்கி விரைகிறது இங்கிலாந்து.
Just look at that wristwork!#AUSvENG | #CWC19 pic.twitter.com/TaNsSyl9j1
— Cricket World Cup (@cricketworldcup) 11 July 2019
நியூசிலாந்து உடனான அரையிறுதியில் இந்தியா தோற்று 24 மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும், தோனியின் தான் சமூக தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். தோனி ஓய்வு பெறக் கூடாது என்பதைக் குறிக்கும் #donotretiredhoni எனும் ஹேஷ்டேக், இந்தியளவில் இன்னமும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
அபாரம்!! இங்கிலாந்தின் அதிரடி ஓப்பனர்கள் ஜானி பேர்ஸ்டோ - ஜேசன் ராய் மிக நிதானமாக இன்னிங்சை தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும், இவர்களும் மிக எச்சரிக்கையாகவே பந்துகளை கையாளுகின்றனர்.
புத்திசாலி பசங்க தான்!!
நேற்று, நியூசிலாந்து எதிராக 240 ரன்கள் எடுக்க முடியாமல், லோ ஸ்கோரிங் ஆட்டத்தில் இந்தியா தோற்றது. ஆகையால், மன ரீதியாக இந்தியப் போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பூஸ்ட் என்று உறுதியாக சொல்லலாம். இங்கிலாந்தை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்று ஆஸ்திரேலியா இந்த தருணத்தில் நிச்சயமாக நம்பும்.
49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு 224 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 119பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், க்றிஸ் வோக்ஸ், அடில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போகிற போக்கை பார்த்தால், ஆஸ்திரேலியா அதிகபட்சம் 220 - 230 ரன்கள் எடுக்கும் என்று தோன்றுகிறது. அதுவும் ஸ்மித் களத்தில் நிற்கும் பட்சத்தில்... ஒருவேளை 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால்...? அய்யோ... போதும்டா சாமி.... மறுபடி முதல்ல இருந்துனா பாடி தாங்காது!!
மேக்ஸ்வெல் அவுட். ஏனப்பா!! ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னோட வழக்கமான அதிரடி டச்சில் விளையாடிக் கொண்டிருந்தீர்!! அது பொறுக்கலையா உமக்கு!!?
23 ரன்களில் 22 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல், ஆர்ச்சர் ஓவரில் கேட்ச் ஆனார். இந்த 22 ரன்களில் 2 பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
32 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டாய்னிஸ் விக்கெட், நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகி விட்டது. அவ்வளவு நேரம் போராடிய ஸ்மித்- கேரேவின் போராட்டத்தையே அது ஒரு நொடியில் வீணாக்கிவிட்டது எனலாம்.
ஸ்மித்- மேக்ஸ்வெல் தற்போது களத்தில்...
உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பிசிசிஐ செயல் தலைவர் சிகே கண்ணா மற்றும் COA உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டயானா எடுல்ஜி, "ஒட்டுமொத்த தொடரிலும் தோனியின் செயல்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஓய்வு பெறுவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அவரால் மட்டுமே அந்த முடிவை எடுக்க முடியும், அவரது உடல்நிலை அந்த முடிவுக்கு வித்திடும். இன்னும் நிறைய கிரிக்கெட் தோனிக்கு மீதம் இருப்பதாகவே நான் உணருகிறேன். அவருடைய ஆலோசனைகள் இன்னமும் இந்திய இளம் வீரர்களுக்கு தேவைப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ஃபின்ச், வார்னர், ஸ்மித், கவாஜா, மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்களின் பட்டியலுக்கு மத்தியில் ஒளிந்திருந்த அலெக்ஸ் கேரே, இந்த உலகக் கோப்பையில் Silent Killer ஆக வலம் வருகிறார். லோ ஆர்டரில் களமிறங்கி பந்துகளை பறக்க வைக்கும் கேரே, இன்று ஆஸி., மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு, மேக்ஸ்வெல்க்கு முன்பாகவே களமிறக்கப்பட்டு இருக்கிறார். இறங்கியது மட்டுமின்றி, நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக, மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு, ஸ்டீவன் ஸ்மித்துடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகிறார்.
நியூசிலாந்திற்கு எதிரான நேற்றைய தோனியின் ரன் அவுட் தான், இந்தியாவின் கடைசி துளி நம்பிக்கையையும் தகர்த்தது. மார்ட்டின் கப்தில் வீசிய துல்லிய த்ரோவில், எல்லைக் கோட்டின் அருகே தோனி ரன் அவுட் ஆனார். கொஞ்சம் ஸ்லோவான த்ரோவாக இருந்தால், தோனி தப்பித்திருப்பார். இந்நிலையில், பந்து ஸ்டெம்ப்பை தாக்கும் முன்பே, எல்லைக் கோட்டை தோனி கடந்திருந்தால், எப்படி இருந்திருக்கும் என்பதை மையப்படுத்தி கார்ட்டூன் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
You are always such an inspiration.
Love you 3000 @msdhoni ❤#TeamIndia #DhoniForever pic.twitter.com/VBLVurxHMM— Aman (@im_Aman6) 11 July 2019
#donotretiredhoni என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவது போல, #DhoniForever எனும் ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதில், ரசிகர்கள் பலரும் தோனி குறித்த தங்களது பசுமையான நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
#DhoniForever #donotretiredhoni
I don't know why Dhoni gets emotional man😭😭
I can't see him like this. pic.twitter.com/YMRdBywZ6Y— કૌશલેશ Tiwari.🇮🇳 (@kaushut) 11 July 2019
You are my favorite
You are my inspiration
You are my leader
You are my legend
You are my everythingLove u 3000 😍💙#donotretiredhoni #DhoniForever #ENGvsAUS #IStandWithTeamIndia #Archer pic.twitter.com/OxjC7WVvOC
— Sumit Kumar 🎭 (@MeSumitKumarr) 11 July 2019
மூன்று தொடர் விக்கெட்டுகளுக்கு பிறகு, ஸ்டீவன் ஸ்மித் - அலெக்ஸ் கேரே ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்து ஆடி வருகிறது. ரன்கள் பெரிதாக அடிக்கப்படாவிட்டாலும், மேற்கொண்டு விக்கெட் சரியாமல் இருப்பதே இங்கு பெரிய விஷயம் தான்.
17 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா மூன்று விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்று உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், #donotretiredhoni எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. தோனி ஓய்வு பெறக் கூடாது ரசிகர்கள் பலரும் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Pls do not retire mahiii sir INDIA is proud to have a player like you, you have given us all that INDIA deserved #donotretiredhoni pic.twitter.com/S9lefw6F1n
— Rajeev Kumar (@RajeevK7777) 11 July 2019
ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து, அலெக்ஸ் கேரேவின் ஹெல்மெட்டை தக்க, அவரது தாடையில் இருந்து ரத்தம் வழிந்ததை நம்மால் காண முடிந்தது. இதில், சுவாரஸ்யம் என்னவெனில், பந்து பட்டு எகிறிய ஹெல்மெட், ஸ்டேம்ப்பில் விழுவதற்குள் கேரே பிடித்துவிட்டார். ஒருவேளை ஸ்டெம்ப்பில் விழுந்திருந்தால் கேரே அவுட் ஆகியிருப்பார்.
Battered... now bleeding... Aussies getting brutalised.
Ferocious 90mph stuff from @JofraArcher 🔥🔥#ENGvAUS pic.twitter.com/ax2RQ7NbJ1— Piers Morgan (@piersmorgan) 11 July 2019
எட்டாவது ஓவரின் கடைசி பந்தை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்ஸ் பணத்து, அலெக்ஸ் கேரேவின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில், ஹெல்மெட் கழண்டு விழுந்தேவிட்டது. இதன்பின், அலெக்ஸ் கேரேவுக்கு தாடையில் பேண்டேஜ் போடப்பட்டுள்ளது.
Oh my god he nearly killed him. 😳😳 #ENGvAUS pic.twitter.com/pkm0uw10rj
— Kash Anwar (@kash1905ifb) 11 July 2019
இப்படியொரு பந்துவீச்சை எதிர்கொண்டால், எப்பேற்பட்ட அணியும் திக்குமுக்காடித் தான் போகும். அதிலும், வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய ஓப்பனர்களான ஃபின்ச், வார்னரை இவ்வளவு சல்லீசாக காலி செய்திருப்பதை பார்க்கும் பொழுது, ஆஸ்திரேலியா இனி மீண்டு வருவது கடினம் என்றே தோன்றுகிறது.
எனக்கு என்னமோ, இந்தியாவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை, ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. 2 ஓவர்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஸ்மித்தின் விக்கெட்டை DRS மூலம் காப்பாற்றிக் கொண்டது. ஹேண்ட்ஸ்கோம்ப்பின் எல்பி அப்பீலில் இருந்தும் தப்பித்துள்ளது.
அடக் கடவுளே.... என்ன பவுலிங் இது!!
வோக்ஸ் வீசிய அபாரமான பவுன்ஸ் பந்தில், எட்ஜ் ஆன டேவிட் வார்னர் 9 ரன்களில், செகண்ட் ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியா 2 ஓவருக்குள்ளாகவே தனது ஓப்பனர்களை இழந்திருக்கிறது.
முதல் ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர், முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற்றி இருக்கிறார்.
An excellent first over from Jofra Archer!#WeAreEngland | #AUSvENG | #CWC19 pic.twitter.com/2q2oWxFt4X
— Cricket World Cup (@cricketworldcup) 11 July 2019
நிச்சயம் இது 50 - 50 கேம் என்றே கூற முடியும். பலத்தோடு ஒப்பிடுகையில் இங்கிலாந்து ஒரு படி மேலிருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வது, அந்த அணிக்கு ஒரு சாதகமான அம்சமாகும். எப்படியாவது 300 ரன்கள் அடித்துவிட்டால், இங்கிலாந்துக்கு அந்த சேஸிங் என்பது கடினமாக மாறும்.
பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஜேசன் ஆகியோரைக் கடந்து இங்கிலாந்து அந்த இலக்கை அடைவது என்பது சிரமமே. ஆனாலும், டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், ;லோ ஆர்டர் என மூன்றிலும் இங்கிலாந்து மிக வலுவான வீரர்களைக் கொண்டிருக்கிறது.
ஸோ, இந்தப் போட்டியை வெல்லப் போவது யார் என்று இப்போதே கணிப்பது இயலாத ஒன்றாகும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு மாற்றமாக, காயம் காரணமாக வெளியேறி இருக்கும் உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.
சோகமான வணக்கங்களுடன் நான் அன்பரசன் ஞானமணி. உலகக் கோப்பை 2019 தொடரில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டு நகர்ந்து செல்ல வேண்டும். தோல்வியை ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அடுத்தமுறை நம்மை மேலும் இந்த தோல்வி மெருகேற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஸோ, இன்று இரண்டாவது அரையிறுதியை பார்க்கப் போகிறோம். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இன்று மல்லுக்கட்டுகின்றன. அதன் லைவ் அப்டேட்ஸ் மற்றும் கமெண்ட்ரி இங்கே....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights