உலககோப்பை கிரிக்கெட் : இலங்கை பங்கம் ; ஆப்கனுக்கு வெற்றிகரமான தோல்வி

கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை திறம்பட சமாளித்து ஆசிய அணிகளின் மானத்தை காப்பாற்றியுள்ளது.

By: June 2, 2019, 9:24:05 AM

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று ( ஜூன் 1ம் தேதி) நடைபெற்ற 2 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானையும், நியூசிலாந்து, இலங்கை அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (ஜூன் 1ம் தேதி) நடந்த லீக் போட்டிகளில், இலங்கை அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியையும் எதிர்கொண்டன.

கார்டிப் மைதானத்தில் நடந்த போட்டியில், இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசி.கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இலங்கை தரப்பில் துவக்கவீரர்களாக கேப்டன் கருணரத்னேவும், திரிமன்னேவும் இறங்கினர். நியூசி, பவுலர்களின் துல்லியமான பவுலிங்கால், இலங்கை அணி சற்று அல்ல நிறையவே தடுமாறியது.
29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் இசுரு உடானா ரன் எடுக்காமலேயே வெளியேறினர்.

கருணாரத்னே சாதனை : போட்டியின் துவக்கத்தில் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல், இருந்து இலங்கை கேப்டன் கருணாரத்னே சாதனைவீரர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளார். இதற்குமுன்னர், ஜிம்பாப்பேவயின் கிராண்ட் பிளவர், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஸ்டூவர்ட், பாகிஸ்தானின் சயீத் அன்வர் உள்ளிட்ட 5 பேர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர். இந்த பட்டியலில், இலங்கை கேப்டன் கருணாரத்னே, ஆறாவதாக இணைந்துள்ளார்.
எளிய வெற்றி : 137 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை தொட்டது. இதன்மூலம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி : வெற்றிகரமான தோல்வியை சந்தித்த ஆப்கன்

பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. நஜிபுல்லா 51 ரன்கள், ரஹ்மத் ஷா 43 ரன்கள் எடுத்தனர்.

ஆஸி.,தரப்பில் கும்மின்ஸ் மற்றும் ஜம்பா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
208 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிகரமான தோல்வி : கிரிக்கெட் தொடர் நடக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மைதானங்கள், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு உள்ளநிலையில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகள் விளையாடுவதற்கு கடினமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போலவே, லீக் போட்டிகளில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மரணஅடி வாங்கி வருகின்றன.கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை திறம்பட சமாளித்து ஆசிய அணிகளின் மானத்தை காப்பாற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தாலும், அது காட்டிய எதிர்ப்புத்தன்மை, ஆப்கானிஸ்தானிற்கு இந்த போட்டி வெற்றிகரமான தோல்வியாகவே கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Worldcup cricket austraila an newzealand victorious mode

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X