உலககோப்பை கிரிக்கெட் தொடரின் நாட்டிங்காமில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் துவங்கி நடைபெற்று வருகின்றன. 10வது லீக் போட்டி, நாட்டிங்காம் மைதானத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
ஆஸி., தடுமாற்றம் : ஆஸி., அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பிஞ்ச் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். நம்பிக்கை நட்சத்திரம் மேக்ஸ்வெல், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆஸி., அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. கூல்டர் நைல், அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிரெத்ஒயிட், 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீசும் சொதப்பல் : 289 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீசும் போட்டியின் துவக்கத்திலிருந்தே தடுமாறிக்கொண்டே இருந்தது. 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்கள் இழப்பிற்கு 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஜெயிக்க வேண்டிய போட்டியில், பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்று செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது.
பெயரிலேயே நம்பிக்கை வைத்துள்ள ஹோப் மட்டும், நின்று ஆடி 68 ரன்கள் எடுத்தார்.
ஆஸி., தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ரசல், பிரெத்வொயிட், ஹோல்டர் உள்ளிட்ட 5 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, ஆஸி, வெற்றிக்கு வழிகோலினார்.