உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ( ஜூன் 8ம் தேதி) முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
கார்டிப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெறவே 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உலககோப்பை தொடரில், இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் ஆடியுள்ள 2 போட்டிகளில் 1 வெற்றியை பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.