Advertisment

England vs New Zealand Live Streaming: கிரிக்கெட் புதிய சாம்பியன் யார்?- போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

When and Where to Watch New Zealand vs England Match Live Online: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் சமபலத்துடன் இருப்பதால், போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
England vs New Zealand Live, ICC Eng vs NZ Live

England vs New Zealand Live, ICC Eng vs NZ Live

England vs New Zealand (Eng vs NZ) Final Live Telecast: 12வது உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் இங்கிலாந்தா அல்லது நியூசிலாந்தா என்பது இன்று (14ம் தேதி) இரவுக்குள் தெரிந்துவிடும். இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் 12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே மாதம் 30ம் தேதி துவங்கி 40 நாட்களுக்கு மேலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் களம் காண்கின்றன.

இந்த கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. 45 லீக் போட்டிகள் முடிந்த நிலையில், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 6 அணிகள் வெளியேறின. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, அரையிறுதியுடன் நடையை கட்டின.

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு, நியூசிலாந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நடந்த பைனலில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்திருந்தது.

இங்கிலாந்து அணி 1979, 1987. 1992க்கு பின், நான்காவது முறையாக தற்போது பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. வெண்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானிடம் இங்கிலாந்து அணி கோப்பையை நழுவவிட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானம் : இறுதிப்போட்டி நடக்க உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இங்கு பேட்டிங் செய்யும் அணிகளின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 271 ரன்கள். உலககோப்பை தொடரில் இங்கு நடந்த 4 போட்டிளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.

இங்கிலாந்து அணியின் பலம் : சொந்த மண்ணில் விளையாட இருப்பதே இங்கிலாந்து அணிக்கு முக்கியமான பலம்.

பேட்டிங்கில், அசத்த ஜேசன் ராய், ஜோ ரூட், இயான் மார்கன், பேர்ஸ்டோவ் காத்திருக்கின்றனர். பவுலிங்கில் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பிளங்கட், ஜோப்ரா ஆர்ச்சர், ரஷித் மிரட்டுகின்றனர்.

நியூசிலாந்து பலம் : கேப்டன் வில்லியம்சன். ராஸ் டெய்லர், குப்டில், நீஷம் பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். பவுலிங்கில் பெர்குசன், பவுல்ட்டு, மாட் ஹென்றி, கிராண்ட்ஹோம் அசத்த காத்திருக்கின்றனர்.

போட்டியை நேரலையாக டிவியில் காண

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி

இணையதளத்தில் நேரலையாக காண

ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்

லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்…

England Live Cricket Score New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment