India- Australia match preview : ஸ்டார்க், கும்மின்ஸ் வேகத்தில் இந்தியா சுழலுமா...சுருளுமா....

ஷிகர் தவான், ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இடதுகை பவுலிங்கில் திணறி வருவது அனைவரும் அறிந்ததே.

ஷிகர் தவான், ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இடதுகை பவுலிங்கில் திணறி வருவது அனைவரும் அறிந்ததே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, india, australia, indian cricket team, england, pakistan, virat kohli, pat cummuins, mittchel starc, உலககோப்பை கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, பாகிஸ்தான், விராட் கோஹ்லி, பேட் கும்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்

worldcup cricket, india, australia, indian cricket team, england, pakistan, virat kohli, pat cummuins, mittchel starc, உலககோப்பை கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா, இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, பாகிஸ்தான், விராட் கோஹ்லி, பேட் கும்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நாளைய ( ஜூன் 9ம் தேதி) போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

Advertisment

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணியை வென்ற உத்வேகத்தில், நாளைய போட்டியில், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில், ரோகித், கோஹ்லி, தோனியும், பவுலிங்கில் பும்ரா, சஹல் என சிறந்தவீரர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் எல்லா வீரர்களுமே ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆஸி., பவுலர்கள் குறித்து இங்கு காண்போம்.

Advertisment
Advertisements

மைக்கேல் ஸ்டார்க்

ஆஸி., அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஸ்டார்க், ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் சிறந்த பவுலராக அறியப்படுபவர். காயம் காரணமாக சிலபோட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும், அவரது பந்துவீச்சின் துல்லியம் எப்போதும் மாறியதில்லை.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை, இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நீண்டகாலமாக இருந்துவருகிறது. ஷிகர் தவான், ரோகித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இடதுகை பவுலிங்கில் திணறி வருவது அனைவரும் அறிந்ததே. ஸ்டார்க், புதிய பந்தில் துல்லிய வேகத்தில் சரியாக வீசினால், இந்திய அணியின் துவக்க விக்கெட்களை எளிதாக கைப்பற்றிவிடலாம்.

கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டார்க் ரசல், ஹோல்டர் என முக்கிய 5 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஸ்டார்க், 140கி.மீ.வேகத்தில் துல்லியமாக பந்தை ஸ்விங் செய்வதால், எதிர்நிலையில் உள்ள பேட்ஸ்மேன்கள் ஆட்டம் கண்டுவிடுகின்றனர். இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்த, ஸ்டார்க் பெரும்எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்....

பேட் கும்மின்ஸ்

ஆஸி., அணியின் அடுத்த அதிரடி பவுலர் பேட் கும்மின்ஸ். 18 வயதில், தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமான கும்மின்ஸ், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே, 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவிற்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 27.33 ; சிறந்த பவுலிங் 5/70 ஆகும்.

India Australia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: