When, Where to Watch New Zealand vs India World Cup 2019 : உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஜூன் 13ம் தேதி) லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க விராட் கோலி தலைமையிலான இந்திய படையும், அதை கண்குளிர காண, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியையும், 2வது போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியையும் வீழ்த்தியுள்ளது. இன்று நாட்டிங்காம் மைதானத்தில் ( ஜூன் 13ம் தேதி) நடக்கும் லீக் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
வருணபகவான் கைகொடுப்பாரா? இங்கிலாந்தின் நாட்டிங்காம் மைதானத்தின் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ். உள்ளூர் நேரப்படி, மாலை 6 மணிக்கு ( இந்திய நேரப்படி மதியம் 3மணி )அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், போட்டி முழுவதுமாக நடக்க வருணபகவான் தான் மனது வைக்க வேண்டும்.
தவானுக்கு பதிலாக ராகுல் : இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு இடதுகை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இந்தியா திரும்பியுள்ளார். அவருக்கு பதில், ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றுள்ளார். ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இருப்பதால், ரிஷப் பண்டிற்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகமே.
இந்நிலையில், ரோகித் சர்மாவுடன். கே,எல் ராகுல், துவக்க வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் யார் இறங்குவது என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது.
போட்டியை நேரலையாக டிவியில் காண
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி
இணையதளத்தில் நேரலையாக காண
ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்
லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்...