உலககோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி - கொட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

வர்ணனை செய்துக் கொண்டிருந்த சவுரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை. - 'இந்த சிங்கிளுக்கு நான் எந்த விளக்கமும் சொல்லப் போவதில்லை'

வர்ணனை செய்துக் கொண்டிருந்த சவுரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை. - 'இந்த சிங்கிளுக்கு நான் எந்த விளக்கமும் சொல்லப் போவதில்லை'

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, indian cricket team, dhoni, defeat, pakistan, england, semis, hardik pandya, netizens, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, தோனி, தோல்வி, பாகிஸ்தான், இங்கிலாந்து, அரையிறுதி, ஹர்திக் பாண்ட்யா, நெட்டிசன்கள்

worldcup cricket, indian cricket team, dhoni, defeat, pakistan, england, semis, hardik pandya, netizens, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, தோனி, தோல்வி, பாகிஸ்தான், இங்கிலாந்து, அரையிறுதி, ஹர்திக் பாண்ட்யா, நெட்டிசன்கள்

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில், தோனி, கேதர் ஜாதவ், சாஹல் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிலும் போட்டியின் கடைசி 5 ஓவர்களில், தோனியா இப்படி விளையாடுகிறார் என்று கிரிக்கெட் விளையாட்டு குறித்து அறியாதவர் கூட ஆச்சர்யப்படும் வகையில், தோனியின் செயல்பாடு அமைந்திருந்தது.

Advertisment

பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றச்சாட்டு : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணி தோல்வியுற்றதை ரசிகர்களால் எளிதில் ஜீரணிக்க இயலவில்லை. பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்திய அணி இவ்வாறு விளையாடியதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்திய அணியின் தோல்வி குறித்து பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்துகள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

48.5வது ஓவரில், ஆர்ச்சர் பந்தில் தோனி சிங்கிள் எடுத்த போது, வர்ணனை செய்துக் கொண்டிருந்த சவுரவ் கங்குலி சொன்ன வார்த்தைகள் இவை.

'இந்த சிங்கிளுக்கு நான் எந்த விளக்கமும் சொல்லப் போவதில்லை'

கோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியில், இவ்வளவு வெளிப்படையாகவே கங்குலி தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டார்.

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே

Advertisment
Advertisements

போட்டியின் முடிவு அதிருப்தியளிப்பதாக இருந்தது. ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற பார்ட்னர்ஷிப், ஒருபோதும் வெற்றியை தேடித்தராது . பாண்ட்யா களத்தில் இருந்தவரை ஒரு உத்வேகம் இருந்தது.

முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா

உலககோப்பை தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோல்வி அல்லது இரண்டு தோல்வி கிடைக்கும். இந்திய அணிக்கு இது அந்த மாதிரி போட்டி போல...

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்

விளையாட்டை உத்வேகமாகவும், சிறப்பாகவும் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. கவலையாகத்தான் உள்ளது.

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்து சொல்லிக்கொண்டே இருக்கலாம். அந்தளவிற்கு சிறப்பாக உள்ளது. இந்திய அணியை வென்றுள்ளது. முதன்முறையாக உலககோப்பையையும் வென்று சாதனை படைக்கும்...

பாகிஸ்தான் கிரிக்கெட் விமர்சகர் மார்ப்

தோனி, இங்கிலாந்து அணியின் டிரஸ்ரூமிற்குள் நுழைகிறார்...

கிரிக்கெட் டேட்டா அனலிஸ்ட் அழகப்பன்

ஒருவேளை தோனி 49வது ஓவருக்காக காத்துக்கிட்டு இருந்தாரோ...

கிரிக்கெட் விமர்சகர் சித்து

தோனியை மட்டும் எப்போதும் குறைசொல்லாதீர்கள். அவரை குறை சொல்பவர்கள், அவரின் கடந்த போட்டிகளின் செயல்பாடுகளை திருப்பி பாருங்கள். இந்த முறை அவர் சரியாக விளையாடவில்லை, அதற்காக, தோல்விக்கு அவரை பலிகடா ஆக்குவது நல்லதாக படவில்லை.

Live Cricket Score India England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: