டெத் ஓவர்கள்னா என்னன்னா தெரியுமா? இவர்கள் வீசுவார்கள் பாருங்கள்!!

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த பவுலர்களின் டெத் ஓவரை காண கிரிக்கெட் உலகமே ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த பவுலர்களின் டெத் ஓவரை காண கிரிக்கெட் உலகமே ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
world cup, cricket, bowlers, india, pakistan, australia, england, death overs, உலககோப்பை, கிரிக்கெட், பவுலர்கள், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டெத் ஓவர்கள்

world cup, cricket, bowlers, india, pakistan, australia, england, death overs, உலககோப்பை, கிரிக்கெட், பவுலர்கள், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டெத் ஓவர்கள்

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த பவுலர்களின் டெத் ஓவரை காண கிரிக்கெட் உலகமே ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது.

Advertisment

12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 30ம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்த உள்ளது.

இந்தியா

இந்திய அணியில் தான் ஒருநாள் தரவரிசையில் முதல்தர பவுலரும் மற்றும் சிறந்த டெத் ஓவர் பவுலரும் உள்ளார். அவர் யாரெனில் ஜஸ்பிரித் பும்ரா தான். புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி உள்ளிட்டோரும் சிறப்பாக பந்து வீசி வருவதால், பும்ராவின் பங்கு சற்று குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும், பும்ராவின் திறமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

Advertisment
Advertisements

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில், யார்க்கர், தொடமுடியாத பால் டெலிவரி உள்ளிட்டவைகளில் மைக்கேல் ஸ்டார்க், பேட் கும்மின்ஸ் சிறந்து விளங்குகின்றனர். கேன் ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல் உள்ளிட்டோர் கடந்த டி20 போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளித்தனர். இவர்களோடு தற்போது மார்கஸ் ஸ்டோய்னிசும் இணைந்துள்ளது அணிக்கு கூடுதல் பலம்.

இங்கிலாந்து

சொந்த மண்ணிலேயே தொடர் நடைபெற இருப்பதால், இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ஜோப்ரா ஆர்சர், டி 20 போட்டிகளில் கலக்கிவிட்டு தற்போது ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை காட்ட உள்ளார். அனுபவம் மிக்க லியாம் பிளங்கெட், அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிவருகிறார். இவர்களை தவிர்த்து டாம் குரான், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி உள்ளிட்டோரும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா

கஸிகோ ரபாடா, லுங்கி கிடி, கிறிஸ் மோரிஸ், டேல் ஸ்டெய்ன் உள்ளிட்டோர் சிறந்த பங்களிப்பை தருவர்.

இலங்கை

லசித் மலிங்கா, நுவுான் பிரதீப், திசாரா பெரேரா, இசுரு உதானா, சுரங்கா லக்மல் உள்ளிட்டோரின் பந்துவீச்சு குறிப்பிடத்தக்க வகையில் அமையும்.

வெஸ்ட் இண்டீஸ்

ஜேசன் ஹோல்டர், ஷனோன் கேப்ரியல், ஆண்ட்ரு ரசல், கார்லஸ் பிரத்வொயிட், ஷெல்டன் காட்ரெல், ஒசானே தாமஸ் உள்ளிட்டோரின் பங்களிப்பு இன்றியைமயாததாக இருக்கும்.

பாகிஸ்தான்

வஹாப் ரியாஜ், ஹசன் அலி, முகம்மது அமீர் உள்ளிட்டோரின் பங்கு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: