Advertisment

Worldcup cricket : Westindies vs Pakistan : உலககோப்பை தொடரை வெற்றியுடன் துவக்கியது வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தான் அணி, கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடர்தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup, cricket, pakistan, westindies, england, indian cricket team, virat kohli, dhoni,உலககோப்பை, கிரிக்கெட், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோஹ்லி, தோனி

worldcup, cricket, pakistan, westindies, england, indian cricket team, virat kohli, dhoni,உலககோப்பை, கிரிக்கெட், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோஹ்லி, தோனி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், இந்த தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Advertisment

12வது உலககோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று (மே 30ம் தேதி) நடந்த முதல்போட்டியில், இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது.

இன்றைய போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின. . இந்த போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. பகர் ஜமான் மற்றும் பாபர் அசம் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓஷானே தாமஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

எளிய இலக்கு : 106 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாட துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. கிறிஸ் கெயில் 3 சிக்சர்கள் விளாச, 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். 13.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

உலககோப்பை வரலாற்றில், பாகிஸ்தானின் மிககுறைந்த நேர இன்னிங்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment