Women’s Premier League Auction 2023 highlights in tamil: பெண்கள் ஐ.பி.எல். தொடரின் முதலாவது சீசன் அடுத்த மாதம் (மார்ச்) 4 ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இதையொட்டி அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு உள்ளன.
5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டவர் உள்பட 90 வீராங்கனைகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளனர். அதன்படி பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் 15 நாடுகளை சேர்ந்த மொத்தம் 448 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இதில் 269 பேர் இந்தியர். 179 வீராங்கனைகள் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள்.
இந்நிலையில், இந்த ஏலத்தில் முதலாவதாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வந்தார். அவரை ஏலத்தில் எடுக்க மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாவதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஏலத்தில் வந்தார். அவரை ரூ.1.80 கோடிக்கு மும்பை அண்ணி ஏலத்தில் எடுத்தது.
2.6 கோடிக்கு யூ.பி வாரியர்ஸால் வாங்கப்பட்ட ஆல்-ரவுண்டர் வீராங்கனை தீப்தி ஷர்மா இதுவரை விலை உயர்ந்த இரண்டாவது இந்திய வீராங்கனை ஆவார்.
டெல்லி கேபிடல்ஸ் ஏலத்தின் முதல் வீராங்கனையாக ஜெமிமா ரோட்ரிக்ஸை 2.2 கோடிக்கு எடுத்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரரும், U-19 டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டனுமான ஷஃபாலி வர்மாவை டெல்லி கேபிடல்ஸ் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் ரூ. 1.9 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். பூஜா வஸ்த்ரகர் ரூ.1.9 கோடி மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
முக்கியமான வெளிநாட்டு வீராங்கனைகள்:
முதல் சுற்றின் போது முக்கியமான தேர்வுகளில் ஒன்று ஆஸ்திரேலியாவின் ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர், அவரை கவுதம் அதானிக்கு சொந்தமான குஜராத் ஜெயண்ட்ஸ் ரூ 3.20 கோடிக்கு வாங்கினர்.
ஸ்டார் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரியை பெங்களூரு அணி ரூ. 1.70 கோடி வெற்றிகரமான ஏலத்தில் எடுத்தது. மேலும், நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைனை அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்தில் வாங்கியது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.