Advertisment

ரூ. 1.6 கோடிக்கு ஏலம்... பட்டை தீட்டிய சி.எஸ்.கே: மும்பை அணியில் மதுரை பொண்ணு கமலினி!

மதுரையைச் சேர்ந்த கமலினியின் பயணம் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் சி.எஸ்.கே அகாடமியில் தொடங்கியது. அவருக்கான பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்கி வருகிறது சி.எஸ்.கே நிர்வாகம்.

author-image
WebDesk
New Update
 WPL auction G Kamalini 16 year old wicketkeeper from Tamil Nadu CSK Mumbai Indians Rs 1 6 crore Tamil News

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்த சூழலில், 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: WPL auction: Meet G Kamalini, 16-year-old wicketkeeper from Tamil Nadu who went to Mumbai Indians for Rs 1.6 crore

நேற்றைய நாளின் முதல் பாதியில், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற, 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கோப்பை 2024 தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக 151.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார் கமலினி. இதே நாளின் இரண்டாவது பாதியில், பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸால் ரூ. 1.60 கோடிக்கு அவர் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுமார் 15 மடங்கு உயர்ந்து அவரை  ரூ. 1.60 கோடிக்கு வாங்கியது மும்பை. மொத்தத்தில் கமலினிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக நேற்றைய நாள் அமைந்தது. 

மதுரையைச் சேர்ந்த கமலினியின் பயணம் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் சி.எஸ்.கே அகாடமியில் தொடங்கியது. அவருக்கான பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்கி வருகிறது சி.எஸ்.கே நிர்வாகம். பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் சி.எஸ்.கே-வுக்கு சொந்தமாக அணி இல்லை. இதனால், கமலினி ஏலத்தில்  களமிறங்கினார். தற்போது அவரை  சி.எஸ்.கே-வின் பரம போட்டியாளரான மும்மை அணி வாங்கியுள்ளது. 

Advertisment
Advertisement

முன்னாள் தமிழக கிரிக்கெட் வீராங்கனையும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளரும், கமலினியின் வழிகாட்டியான ஆர்த்தி சங்கரன், சமீபத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசினார். அப்போது, "கமலினிக்கு இயற்கையாக திறமை இருக்கிறது. எல்லாமே அவருக்கு மிக எளிதாக வந்துவிடுகிறது, அதனால்தான் அவரால் ஆறு மாதங்களுக்குள் விக்கெட் கீப்பராக மாற முடிந்தது. அவரிடம் ஊக்கமும் கடின உழைப்பும் உள்ளது. பல பெண்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு, போட்டி கிரிக்கெட்டை விட்டு வெளியேறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர் இங்கு நீண்ட காலம் தங்கப் போகிறார்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்று பரவல் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட ஒரு நாள் கழித்து, கமலினியின் தந்தை குணாளன் தனது மகன் கிஷோருடன் கிரிக்கெட் பயிற்சி செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, அவரது 12 வயது மகளான கமலினி கிரிக்கெட் பந்தை எடுத்து சிரமமின்றி வீசினார். கமலினி இதற்கு முன் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாததாலும், முறையான பயிற்சி பெறாததாலும், அவரது ஆரம்ப ஆர்வம் ஸ்கேட்டிங்கில் இருந்ததால், குணாளன் அவர் பந்து வீசியதைப் அதிர்ச்சியடைந்தார். அவர்  கிரிக்கெட் விளையாட்டிற்கான இயல்பான திறமையைக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்துள்ளார். அவரது இயல்பான திறமையை உணர்ந்த அவரும் அவரது மனைவி சரண்யாவும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதலீடு செய்ய முடிவு செய்தனர்.

ஆரம்பத்தில் சந்தேகங்கள், சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் கமலினிக்கு சிறந்த பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தனர். குணாளனின் அர்ப்பணிப்புப் பயிற்சி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியின் ஆதரவுடன், கமலினியின் திறமைகள் வேகமாக மேம்பட்டன. அவர் தமிழ்நாடு  19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்கிற விருது உட்பட குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளார்.

சி.எஸ்.கே யூடியூப் சேனலால் வெளியிடப்பட்ட வீடியோவில், கமலினியின் பயணத்தைப் பட்டியலிட்டு, அவரது தந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அவர் எதிர்கொள்ளும் கடினமான நேரங்களைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பேசினர். இந்தச் செய்தியைக் கேட்டதும் கண்ணீரில் மூழ்கியதாகக் கூறினார் கமலினி. தனது தந்தையை மருத்துவமனைக்குச் சென்ற ஒரு நாள் கழித்து ஆந்திராவுக்கு எதிராக சதம் அடித்து மிரட்டி இருந்தார். கவலைகளும் கஷ்டங்களும் ஒருபுறம் இருந்தாலும், மகளிர் பிரீமியர் லீக்கில் கலக்க காத்திருக்கிறார் கமலினி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Auction Chennai Super Kings Mumbai Indians WPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment