Advertisment

WFI தேர்தலுக்கு எதிர்ப்பு: மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பிரதமர் மோடிக்கு கடிதம்; பத்மஸ்ரீ திரும்ப ஒப்படைப்பு

பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு நெருக்கமான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
wrestler

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பிரதமர் மோடிக்கு கடிதம்; பத்மஸ்ரீ திரும்ப ஒப்படைப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு நெருக்கமான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவராக வியாழக்கிழமை நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Wrestler Bajrang Punia writes to PM Modi, says he will return Padma Shri in protest over WFI elections

சமீபத்தில் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலல் முடிவில், சர்ச்சைக்குரிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

“எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பித் தருகிறேன். அதைச் சொல்வதற்குதான் இந்த கடிதம்” என்று பஜ்ரங் புனியா சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அன்புள்ள பிரதமர் ஜி, உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறது என நம்புகிறேன். நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள், ஆனால், நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை உங்கள் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன். பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாட்டின் பெண்கள் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் நிறுத்தப்பட்டது.



ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, டெல்லி காவல்துறை குறைந்தபட்சம் அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதியில் இறங்கினோம். ஜனவரியில் 19 புகார்தாரர்கள் இருந்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்திற்குள் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. இதன் பொருள் பிரிஜ் பூஷன் தனது செல்வாக்கை செலுத்தி மற்ற 12 மல்யுத்த வீரர்களை தங்கள் எதிர்ப்பை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

எங்கள் போராட்டம் 40 நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் எங்களுக்கு நிறைய அழுத்தம் இருந்தது. எங்கள் போராட்ட தளம் அழிக்கப்பட்டது, நாங்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதக்கங்களை கங்கையில் மூழ்கடித்தோம். அப்போது விவசாய தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். அந்த நேரத்தில் உங்கள் அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் எங்களை அழைத்து நீதியை உறுதி செய்தார். நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவர் எங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தார். எனவே, நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டோம்.

ஆனால், டிசம்பர் 21-ம் தேதி நடந்த மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு தேர்தலில், கூட்டமைப்பு மீண்டும் பிரிஜ் பூஷனின்கீழ் வந்தது. எப்பொழுதும் போல் கூட்டமைப்பை வெல்வேன் என்று அவரே கூறினார். பெரும் அழுத்தத்தின் கீழ் இருந்துவரும் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நாங்கள் இரவு முழுவதும் கண்ணீர் சிந்தினோம். என்ன செய்வது, எங்கு செல்வது என்று எங்களுக்குப் புரியவில்லை. அரசாங்கம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. எனக்கு 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அர்ஜுனா, கேல் ரத்னா விருதும் பெற்றேன். நான் இந்த விருதுகளைப் பெற்றபோது, நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். ஆனால், இன்று சோகம் அதிகமாகிறது. மேலும், ஒரு பெண் மல்யுத்த வீராங்கனை தனது பாதுகாப்பு காரணமாக விளையாட்டை விட்டு விலகியுள்ளார். 

விளையாட்டு நமது பெண் விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆனால்,  ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பத்தாவோ’வின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கக்கூடிய பெண்கள் இப்போது விளையாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உள்ளது. ‘விருது’ பெற்ற மல்யுத்த வீரர்களான எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நமது பெண் மல்யுத்த வீராங்கனைகள் அவமதிக்கப்படும் போது பத்மஸ்ரீ விருது பெற்றவளாக என்னால் இருக்க முடியாது. எனவே, இந்த விருதை உங்களிடமே திருப்பித் தருகிறேன்” என்று மல்யுத்த வீராங்கணை பஜ்ரங் புனியா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் சிங், அனிதா ஷியோரனை 7-க்கு 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்ப்புத் தெரிவித்த மல்யுத்த வீரர்களால் ஆதரிக்கப்பட்ட எதிர் பிரிவைச் சேர்ந்த பிரேம் சந்த் லோச்சப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே நாளில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங், தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

“யே லடாய் தில் சே லடி (இந்தப் போரை நாங்கள் எங்கள் இதயப் பூர்வமாக நடத்தினோம்). இறுதியில், நாங்கள் 40 நாட்கள் சாலைகளில் தூங்கினோம். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த போராட்டங்களின் போது எங்களுக்கு ஆதரவாக வந்த எங்கள் நாட்டின் பல மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரிஜ் பூஷண் சிங்கின் வணிகப் பங்குதாரரும் நெருக்கமானவருமான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டுவிடுகிறேன்…” என்று வியாழக்கிழமை புது டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் மாலிக் ஊடகவியலாளர்களிடம் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முறையீடு செய்து அந்த இடத்தில் இருந்தவர்களுடன் கண்ணீருடன் வெளியேறினார்.

“இவர் பிரிஜ் பூஷனின் வலது கை. அவர் தனது சொந்த மகனை விட மிகவும் சிறப்பு வாய்ந்தவர்,  இப்போது அவர் தலைவராக இருப்பதால், வரும் பெண் மல்யுத்த வீரர்களும் அவர்களுக்கு இரையாவார்கள். மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது திறந்த வெளியிலும் நடக்கும்” என்று வினேஷ் வியாழக்கிழமை புது தில்லியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“ஆரம்பத்தில் இருந்தே பிரிஜ் பூஷனின் முகாம் தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கூறி வந்தது. அவர்களின் நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியும். இவர்களைப் போன்றவர்கள் இந்தப் பதவிகளைப் பெறுவது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment