/tamil-ie/media/media_files/uploads/2022/10/Untitled-design-27.jpg)
Source: Instagram/saraann_lee
பிரபல மல்யுத்த வீராங்கனை, சாரா லீ தனது 30ஆம் வயதில் உடல்நிலை குறைவால் மரணமடைந்துள்ளார்.
பொழுதுபோக்கு குத்துசண்டை நிகழ்ச்சியாக WWE உலகமெங்கும் ரசிகர்களை பெற்றிருக்கிறது. அதில் பங்குகொள்ளும் முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாரா லீ, 2015, 2016 காலகட்டங்களில் பிரபல மல்யுத்த வீராங்கனையாக மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
2015ஆம் ஆண்டு, WWE-ன் 'டஃப் எனஃப்' நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், விளையாட்டு துறையில் ஆர்வத்துடன் பங்குபெற்று வந்தார்.
சாராவின் மரணத்துக்கான காரணத்தை அவரது குடும்பத்தினர் வெளியிடவில்லை. ஆனால், சமீப காலமாக அவருக்கு கடுமையான சைனஸ் பிரச்சனை இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாரா லீயின் மரணத்தைத் தொடர்ந்து, WWE அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் "முன்னாள் டஃப் எனஃப்' வெற்றியாளரான சாரா லீ, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உலகில் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக செயல்பட்டவர்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் சாரா லீயின் தாயார் டெரி லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில், "சாரா லீயின் மரணம் குறித்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். அவளின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.