மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், பபிதா போகட், சாக்ஷி மாலிக் மற்றும் ரவி தஹியா ஆகியோருடன் ஜனவரி மாதம் தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது.
இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுடன் 'ஆலோசனை' நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
Advertisment
The government is willing to have a discussion with the wrestlers on their issues.
I have once again invited the wrestlers for the same.
மல்யுத்த வீரர்களுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்காக மல்யுத்த வீரர்களை மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கிறேன், என்று புதன்கிழமை நள்ளிரவு தனது சமூக ஊடகங்கள் மூலம் தாக்கூர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், மல்யுத்த வீரர்களின் பிரதிநிதிகளை சந்தித்து நான்கு நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
Advertisment
Advertisements
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து நள்ளிரவுக்குப் பிறகு முடிவடைந்த இந்தச் சந்திப்பில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் பல பயிற்சியாளர்கள் கலந்துகொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
உள்துறை அமைச்சரை நாங்கள் சந்தித்தோம். என்னால் மேலும் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது, என்று பஜ்ரங் கூறினார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி அவரைக் கைது செய்யக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யூத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து டெல்லி காவல்துறை ஏப்ரல் 28 அன்று சிங்கிற்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்தது.
வெள்ளிக்கிழமை இந்த வெளியீடு தெரிவித்தபடி, தொழில்முறை உதவிக்கு பதிலாக "பாலியல் ஒத்துழைப்புக்கு" கோரும் இரண்டு நிகழ்வுகள் உள்ளன; தகாத தொடுதல், மார்பகத்தின் மீது கை வைத்தல், தொப்புளைத் தொடுதல் பின்தொடர்தல் உட்பட பல மிரட்டல் நிகழ்வுகள் என கிட்டத்தட்ட 15 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இதில் அடங்கும்.
ஒரு ஒலிம்பியன், காமன்வெல்த் தங்கப் பதக்கம் வென்றவர், ஒரு சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் ஆகியோர் குறைந்தது மூன்று பெண் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நான்கு மாநிலங்களில் உள்ள 125 சாட்சிகளின் வாக்குமூலங்கள் டெல்லி காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிங் மீதான இந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையின் நிலை, அமித்ஷா உடனான சந்திப்பில், மல்யுத்த வீரர்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினையாக இருந்தது.
வலுவான குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர். உரிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறியதாக தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“