Advertisment

அஷ்வின் vs ஜடேஜா: வெளிநாட்டு மைதானங்களில் அதிக விக்கெட் யாருக்கு?

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 7 ஆட்டங்களில் 28.11 என்ற சராசரியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WTC Final 2023: Ashwin vs Jadeja in Tests overseas Tamil News

Ashwin vs Jadeja in Tests outside india Tamil News

India vs Australia WTC Final 2023 Tamil News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.

Advertisment

இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அஷ்வின் vs ஜடேஜா

publive-image

இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுழல் மன்னர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர். இருப்பினும், ஓவல் மைதான ஆடுகளத்தை பொறுத்து, இவர்களில் யாரேனும் ஒருவருக்குத் தான் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். அவ்வகையில், வெளிநாட்டு மைதானங்களில் அதிக விக்கெட் வீழ்த்தியது யார்?, யாருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று இங்கு அலசி ஆராயலாம்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஜடேஜாவும், அஷ்வினும் சிறந்த ஆல்ரவுண்டர்களாக வலம் வருகிறார்கள். இருப்பினும், இருவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. இரண்டு வீரர்களும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான வெற்றியை ருசித்துள்ளனர்

சமீப காலமாக ஜடேஜா பேட்டிங்கில் ஜொலித்து வருவதால், இந்தியா தனி சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

publive-image

வெளிநாட்டு மைதானங்களில் அதிக விக்கெட்

பந்துவீச்சைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மைதானங்களில் நடந்த டெஸ்டில் ஜடேஜாவை விட அஸ்வின் சற்று முன்னிலை பெற்றுள்ளார். இந்த வகையில், அஸ்வின் 28 டெஸ்டில் 87 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா 22 டெஸ்டில் 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த டெஸ்டில் சராசரி அடிப்படையில் ஜடேஜா (36) அஸ்வினை (36.18) விட பின்னிலையில் இல்லை.

இருவரும் வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சில குறிப்பிடத்தக்க ஆட்டங்களை விளையாடியுள்ளனர். இந்தப் போட்டிகளில் அஸ்வின் 24.56 சராசரியில் 1,081 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் இரண்டு அரைசதங்கள் மற்றும் பல சதங்களும் அடங்கும். ஜடேஜா இந்த டெஸ்டில் 29.72 சராசரியில் 981 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆட்டங்களில் அவர் 6 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார்.

publive-image

இங்கிலாந்தில் மண்ணில்

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், 7 ஆட்டங்களில் 28.11 என்ற சராசரியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பேட்டிங்கில் அவர் 23.72 சராசரியில் 261 ரன்களை குவித்துள்ளார்.

ஜடேஜா இங்கிலாந்தில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.08 சராசரியில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இந்த ஆட்டங்களில் 29.7 ரன்களில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் என 594 ரன்கள் எடுத்துள்ளார்.

publive-image

அஸ்வின் டெஸ்டில் 9வது அதிக விக்கெட் எடுத்தவர் ஆவார். அவர் 92 டெஸ்டில் 23.93 சராசரியாக 474 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பேட்டிங்கில் அவர் 13 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் உதவியுடன் 26.97 சராசரியில் 3,129 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜடேஜா 64 டெஸ்டில் 35.91 ரன்களில் 2,658 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 18 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். அவர் சராசரியாக 264 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Indian Cricket Team Indian Cricket Ravindra Jadeja Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment