World Test Championship 2023, India's Predicted Playing XI Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மறுநாள் 12ம் தேதி ‘ரிசர்வ் டே’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா பிளேயிங் லெவன் எப்படி?
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலம் பொருந்திய அணியாகவே உள்ளது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா உடன் இளம் வீரர் ஷுப்மான் கில் களமாடுவர். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த ஜோடி நல்ல ஃபார்மில் இருந்தனர். அவர்களே இறுதிப்போட்டியிலும் தொடக்க வீரர்களாக களமிடுவார்கள்.
3வது மற்றும் 4வது இடத்தில் வழக்கம் போல், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி பேட்டிங் செய்ய வருவார்கள். இருவரும் வெளிநாட்டு நிலைமைகளில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடியுள்ளனர். அஜிங்க்யா ரஹானே தனது 5-வது இடத்தில் பேட்டிங் மீண்டும் அணிக்கு திரும்புவார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே, 5வது இடத்தில் இருந்து சூரியகுமாரை கழற்றி விட்டுள்ள அணி நிர்வாகம் ரஹானேவை தேர்வு செய்துள்ளது.
விக்கெட் கீப்பராக கே.எஸ்.பாரத்தை விட அனுபவம் கொண்டவரான கே.எல். ராகுல் வரலாம். அவர் மிடில்-ஆடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எனவே, அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. தவிர, அவர் சிறந்த வெளிநாட்டு சாதனையை கொண்டவராகவும் இருக்கிறார்.
இங்கிலாந்து மண்ணில் பந்துகளை வீச ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஷ்வின் ஆகிய இருவரைக் கொண்ட சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையும், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட வேகப்பந்து வீச்சு வரியையும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி, முகமது சிராஜ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கேஎஸ் பாரத் (வி.கே.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.