Advertisment

WTC Final: ஓவல் பிட்ச் தன்மை எப்படி? இடது கை வேகப் பந்தை சந்திக்க தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

ஓவல் மைதான ஆடுகளத்தில் வழக்கம் போல் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WTC Final 2023: India vs Australia Oval Pitch report in tamil

WTC Final 2023: Oval pitch report; India vs Australia playing Tamil News

India vs Australia, WTC Final 2023: The Oval London Pitch Tamil News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நாளை புதன்கிழமை (ஜூன் 7ம் தேதி) முதல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Advertisment

இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓவல் பிட்ச் எப்படி?

இங்கிலாந்து மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, ஒவ்வொரு பகுதியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது காலையில் ஆடுகளம் வேகப்பந்துக்கு ஒத்துழைக்கும். ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் குவிக்க முடியும். தேனீர் இடைவேளைக்கு பிறகு பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால், வெற்றிகரமாக செயல்பட முடியும்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த ஆட்டத்திற்கான ஆடுகளம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு விட்டது. ஓவல் மைதான ஆடுகளத்தில் வழக்கம் போல் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். முதல் 3 நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

publive-image

அதேவேளையில், இங்கிலாந்தின் வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதால், கடைசி 2 நாட்களில் மேகமூட்டத்துடன் கூடிய சூழல் நிலவினால் சுழற்பந்து வீச்சாளர்களை விட ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதனை முறியடித்து நிலையான ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணியின் பந்துவீச்சு திட்டத்தை உடைக்கும் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்களை குவிக்கலாம்.

ஓவலில் 343, 304, 238, 156 ஆகிய ரன்கள் சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். கடைசி 2 நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், இதற்கு முன் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக போட்டிகளில் வெற்றியை பெற்று உள்ளதாலும் இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் காலையில் குளிர் மற்றும் மேகமூட்டமான சூழ்நிலையில் பயிற்சி எடுத்தனர். ஆனால் இந்திய வீரர்கள் மதியம் பயிற்சி அமர்வுக்கு திரும்பியபோது ஓவலில் சூரிய வெளிச்சம் அதிகம் இருந்தது. இது ஒரு விருப்பமான பயிற்சி அமர்வு என்றாலும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ரிசர்வ் வீரர் சூர்யகுமார் யாதவ் ஆகியோரைத் தவிர்த்து பெரும்பான்மையான வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

இரண்டரை மணி நேர பயிற்சி அமர்வில், கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்தார். மேலும் அனைத்து முக்கிய பேட்டர்களும் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் பயிற்சி எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தங்கள் வேகப்பந்து வீச்சினால் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதால், இந்திய வீரர்கள் இடது கை வேகப்பந்து வீச்சில் விளையாடி அதிக நேரத்தை செலவிட்டனர். அணியில் உள்ள ஜெய்தேவ் உண்டகட், வலைப்பந்து வீச்சாளர் அனிகேத் சவுத்ரி மற்றும் உள்ளூர் வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் தங்கள் இடது கை பந்துவீச்சுடன் பேட்டர்களுக்கு நிறைய பயிற்சி அளித்தனர்.

சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, சுப்மன் கில் மற்றும் முகமது ஷமி ஆகியோர் முதலில் பயிற்சி செய்தனர். ஷமி 30 நிமிடங்களுக்கும் மேலாக பேட்டிங் செய்தார். அவர் தனது பேட்டிங்கை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள அவருக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷமி மற்றும் உனத்கட் ஆகியோரை எதிர்கொள்ள விராட் கோலி அருகிலுள்ள வலைக்கு நகரும் முன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சில பந்துகளை அடித்தார். அதன் பிறகு ரஹானே மற்றும் கில் ஆகியோருடன் சில முக்கியமான கேட்ச்சிங் பயிற்சியைப் பெற்றார்.

இந்திய அணியுடன் பயணிக்கும் வலைப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான டெல்லியின் ஆபி புல்கிட் நரங், நாதன் லியானை சமாளிக்க கடுமையான பயிற்சிக்கு அவரைப் பயன்படுத்தினர். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது நான்காவது வேக விருப்பத்தை இந்தியா தீர்மானிக்கும். ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முடிவுக்கு வர முடியாது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஈடுபட்டார். அஸ்வின் பேட்டிங் மட்டுமே செய்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia England London Sports Cricket Indian Cricket Team Indian Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment