World Test Championship (WTC) Final 2023, Live Streaming Details: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அவ்வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து, 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.
இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற ெதன்ஆப்பிரிக்கா மயிரிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7, புதன்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி புதன்கிழமை மாலை 3:00 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எந்த டிவி சேனல்கள் ஒளிபரப்பும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை லைவ்வில் பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் நேரலையில் (லைவ்வில்) ஒளிபரப்பப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.