Visiting batsmen with most Test runs at The Oval Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று (புதன்கிழமை) முதல் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Advertisment
இன்று 2ம் நாள் ஆட்டநேர ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஹெட் டிராவிஸ் ஹெட் 163 ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 103 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 400 ரன்கள் எடுத்தது.
ஓவலில் அதிக ரன்கள்
Advertisment
Advertisements
இந்நிலையில், உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் லண்டன் ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. டாப் 5 வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஒருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
ஓவலில் அதிக ரன்கள்குவித்த வீரர்கள் பட்டியலில் பின்வருமாறு:-
553 - சர் டான் பிராட்மேன் 512 - ஸ்டீவ் ஸ்மித் 478 - ஆலன் பார்டர் 448 - புரூஸ் மிட்செல் 443 - ராகுல் டிராவிட்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil