Advertisment

டெஸ்ட் ரேங்கிங்-ல் ஆஸ்திரேலியா டாப்; WTC ஃபைனல் டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு?

ஐசிசி-யின் விதிகளின்படி, இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், இரண்டு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

author-image
WebDesk
Jun 03, 2023 16:15 IST
WTC Final 2023: India or Australia Which Team Will Win ICC Title if Marquee Clash Ends in Draw? Tamil News

WTC Final 2023: India or Australia Which Team Will Win ICC Title if Marquee Clash Ends in Draw? Tamil News

WTC Final 2023 -  India vs  Australia Tamil News: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். மேலும், கோப்பையை யார் கைப்பற்றுவார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisment

இரு அணிகளும் 2021-23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. இதில் ஆஸ்திரேலியா முந்தைய சுழற்சியில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இந்த முறை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக விளையாட உள்ளது.

நியூசிலாந்திடம் முந்தைய சுழற்சியில் தோல்வியடைந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளது. மறுபுறம் பார்டர் கவாஸ்கர் டிராபி 2023ல் இந்தியா தோல்வி கண்ட ஆஸ்திரேலியா அதற்கு பதிலடி கொடுக்க உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

WTC ஃபைனல் 2023 போட்டி டிராவில் முடிந்தால் எந்த அணி வெற்றி பெறும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்ததால், அவர்கள் கோப்பையை அவ்வளவு எளிதாகக் கைப்பற்றுவார்கள் என்று அர்த்தமல்ல. டிரா ஏற்பட்டாலும் கூட, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்.

மேலும், ஐசிசி-யின் விதிகளின்படி, இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், இரண்டு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

முந்தைய பதிப்பின் இறுதிப் போட்டியின் போது நடந்தது போல், இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் 'ரிசர்வ் டே' கொடுக்கப்படும். இருப்பினும், முதல் ஐந்து நாட்களில் விளையாடும் நேரம் கணிசமான இழப்பு ஏற்பட்டால் மட்டுமே கூடுதல் விளையாட்டு நேரம் பரிசீலிக்கப்படும்.

எந்தவொரு வழக்கமான டெஸ்ட் போட்டிக்கும், சராசரியாக விளையாடும் நேரம் 30 மணிநேரம், ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் அல்லது ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வரை நீடிக்கும். 90 ஓவர்களை எந்த நாளிலும் முடிக்க முடியாவிட்டால் மட்டுமே இறுதிப்போட்டி ரிசர்வ் நாளுக்குள் தள்ளப்படும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Sports #London #India Vs Australia #World Test Championship
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment