IND vs AUS WTC FINAL LIVE SCORE, DAY 1 - LATEST UPDATES IN TAMIL: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சுவதாக அறிவித்தார். அதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
கையில் கருப்பு பட்டை அணிந்த இந்திய வீரர்கள்
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஒடிசாவில் நடந்த ரயில்கள் விபத்தில் உயிரிழந்த உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாட்டு அணிகளின் தேசிய கீதங்களுக்கு முன்பாக உயிரிழந்தவர்களின் நினைவாக வீரர்கள் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
"இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். மற்றும் பரிதாபமாக உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil