நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஷ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பிளேயிங் 11 இல் இல்லாதபோதும் அணிக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (ஜூன் 7) தொடங்கியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்தப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையும் படியுங்கள்: ‘தங்க முலாம் பூசப்பட்ட பந்து’… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தயாரிப்பு பின்னணி!
இந்தநிலையில், முன்னணி சுழற்பந்து வீச்சாளாரான அஷ்வின் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 5 ஆவது பவுலராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், போட்டியின் நடுவே அஷ்வின் வீரர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு வந்து கொடுத்தார். பொதுவாக சீனியர் வீரர்கள் ட்ரிங்க்ஸ் கொண்டு செல்வது வழக்கமாக இல்லாத நிலையில், அஷ்வின் கொண்டு சென்றுள்ளதால், அவர் பவுலர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கவே ட்ரிங்க்ஸ் கொண்டு சென்றிருப்பார் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தான் அணியில் இல்லாவிட்டாலும், அணிக்கு அஷ்வின் பங்களிப்பை வழங்கி உள்ளது உறுதியாகிறது. இதுதொடர்பாக ஒரு நெட்டிசன், ”நீங்கள் அஷ்வினை ஒரு கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேற்றலாம் ஆனால் அஷ்வினிடம் இருந்து கிரிக்கெட்டை எடுக்க முடியாது. அவர் ட்ரிங்க்ஸ் எடுத்துச் செல்லும்போது அணியுடன் ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil