WTC Final, IND vs AUS: Rohit shama Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நேற்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா இம்முறையும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். ஏற்கனவே டாஸ் ஜெயித்து பந்து வீச்சு தேர்வு செய்ததற்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை பெஞ்சில் அமர வைத்ததற்கும் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், அவர் தற்போது இக்கட்டான சூழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil