Advertisment

WTC: 6ல் 5 கட்டாய வெற்றி… இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடர் கவனம் ஈர்ப்பது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் திரும்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
WTC: India prepare to play Bangladesh in two-Test series Tamil News

TeamIndia Test team - BANvIND

News about India, World Test Championship in tamil: இப்போதைக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட் பற்றி மறந்து விடுவோம். இன்னும் ஒரு வருடத்தில் ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரின் கவனமும் ஒருநாள் தொடர் பக்கம் தான் உள்ளது. ஆனால் அதற்கு முன் மற்றொரு பெரிய போட்டி உள்ளது. அது கிட்டத்தட்ட அனைவரின் நினைவிலிருந்தும் நழுவவிடப்பட்டுள்ளது. அது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி.

Advertisment

டி20 உலகக் கோப்பை தொடருக்குப்பின் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் போட்டிகள் நடந்து வருகின்றன. அடிலெய்டில் முதல் முல்தான் வரை என ஒவ்வொரு போட்டியும் சூடுபிடித்துள்ளது. ஆனாலும், அடுத்தாண்டு ஜூன் முதல் வாரத்தில் லண்டன் ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு இப்போது நான்கு அணிகள் மட்டுமே உண்மையான வாய்ப்பில் உள்ளன.

நாளை புதன்கிழமை சிட்டகாங்கில் தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா களமிறங்குவதற்கு முன், அதன் தற்போதைய நிலை இதுதான்:

தென்ஆப்பிரிக்காவில் தொடரின் தோல்வி மற்றும் இங்கிலாந்தில் ஐந்தாவது டெஸ்டில் தோல்வி (2021ல் நடத்தப்பட்டது) அதாவது, இந்தியா ஆபத்தான நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி தொடர்ந்து இரண்டாவது முன்னேறுவதற்கு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் உட்பட, மீதமுள்ள ஆறு டெஸ்டுகளில் குறைந்தது ஐந்து போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.

நியூசிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வரிசைப்படுத்தியுள்ள இலங்கை, இந்தியாவை விட சற்று முன்னால் உள்ளது. சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது சற்று கடினமானது. எனவே இந்தியா வங்கதேசத்தை எதிர்கொண்டாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதும் இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஆஸ்திரேலியா 75.00 சதவீத புள்ளிகளைக் கொண்டிருப்பதால், மீதமுள்ள நான்கில் மூன்றில் வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா, அவர்கள் தோல்வியைத் தவிர்த்து, ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால், அவர்கள் தங்களுக்கான இடத்தை பிடித்து விடுவார்கள்.

எனவே, இந்தியாவின் கண்ணோட்டத்தில், அவர்களுக்கு முன்னால் உள்ள பணி எளிதானது. அவர்கள் ஆறு டெஸ்டுகளில் ஐந்தில் வெற்றி பெற வேண்டும் - ஒரு தோல்வி அவர்களை வெளியேறும் நிலைக்குத் தள்ளும் - அதுதான் அவர்களின் மிகப்பெரிய சவால். இந்தியா இந்த ஆண்டு விளையாடிய நான்கில் ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகளும் எளிதாக இருக்கப்போவதில்லை. குறிப்பாக கேப்டன் ரோஹித், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா இல்லாத நிலையில், இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த வீரர்கள் 2021ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா வருவதற்கு சிறப்பான பங்கை கொடுத்திருந்தனர்.

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொறுப்பு கேப்டன் கே.எல் ராகுல், "நாங்கள் முயற்சி செய்து அடிப்படைகளுக்குத் திரும்ப வேண்டும்.நாங்கள் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் பழகிய அணி, எனவே இது நம்மையும் ஒருவரையொருவர் நினைவுபடுத்துவதும், ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகச் செய்ததையும், என்ன வேலை செய்தோம். என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வதும், அதை மீண்டும் முயற்சி செய்வதும் ஆகும்.

ஒவ்வொரு முறையும் நாம் வெவ்வேறு வடிவத்தில் விளையாடுகிறோம், அது ஒரு சவாலாக இருக்கும். மேலும் ஒவ்வொரு வீரரும் இருக்கும் மைண்ட் ஸ்பேஸ் முற்றிலும் வேறுபட்டது. ஒரு கேப்டனாக உங்கள் வீரர்களை ஆதரிப்பதும், அவர்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிப்பதும் முக்கியம். மேலும், நமது கிரிக்கெட்டை நாமும் ரசிப்பதும் முக்கியம், 'நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் விளையாடவில்லை' என்று நினைக்க வேண்டாம். வீரர்களாகவோ அல்லது அணியாகவோ நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இது 'நாங்கள் இந்த வடிவத்தில் விளையாடுகிறோம், ஒரு அணியாகவும், தனி நபராகவும் அணிக்காகவும், நாட்டிற்காகவும் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்" என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு விஷயங்களை மிகவும் சவாலானதாக மாற்ற, அவர்கள் நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்விங்கிங் நிலைமைகளைப் போலவே தங்கள் பேட்டிங் வரிசையை சோதிக்கும் வகையிலான பிட்ச்களில் - மெதுவான டர்னர்களில் - வங்கதேச அணியை எதிர்கொள்வார்கள். சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளைப் போல் டெஸ்டில் அவர்கள் வலிமையாக இல்லை என்றாலும், கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆஃப் ஸ்பின்னர் மெஹிதி ஹசன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர் இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுப்பார்கள். சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடும் போது, ​​முந்தைய தலைமுறையைப் போல் சிறப்பாக இல்லை. மேலும் தற்போதைய அணியில் விராட் கோலி, ரோஹித் (முதல் டெஸ்ட்டில் இல்லை), ஆர் அஷ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் வங்கதேசத்தில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான தொடரை சிறப்பாக பயன்படுத்திய இந்திய ஏ அணியின் சேட்டேஷ்வர் புஜாரா, கே.எஸ்.பாரத், அபிமன்யு ஈஸ்வரன், சவுரப் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி போன்றோருக்கு வாய்ப்பளித்தது. டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு சில தேர்வு அழைப்புகள் உள்ளன. குறிப்பாக ராகுலுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குகிறார்கள் என்பது குறித்து. கில் முதல் தேர்வாக இருந்தாலும், வங்கதேச ஏ அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்ததன் மூலம் ஈஸ்வரன் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கியுள்ளார். அவரை இந்திய நிர்வாகம் கருத்தில் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

London Sports Cricket Indian Cricket Team World Test Championship Indian Cricket India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment