/indian-express-tamil/media/media_files/YkfMWKgtgSONIsZ7ip5Y.jpg)
ராஞ்சியில் இன்றுடன் நிறைவு பெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India Vs England | World Test Championship: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா விசாகப்பட்டினம், ராஜ்கோட்டில் நடந்த அடுத்த இரு டெஸ்டுகளில் வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், ராஞ்சியில் இன்றுடன் நிறைவு பெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது.
After solid resistance with the bat, Shubman Gill clears the ropes twice and brings up his FIFTY! 😎#TeamIndia only 2 runs away from a win in Ranchi!
— BCCI (@BCCI) February 26, 2024
Follow the match ▶️ https://t.co/FUbQ3MhXfH#INDvENG | @IDFCFIRSTBank | @ShubmanGillpic.twitter.com/zahlGUrYQG
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த வெற்றிக்கு முன் 59.52 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 % பெற்று அதே 2வது இடத்தில் நீடிக்கிற்து.
முதல் இடத்தில் (75%) நியூசிலாந்து அணி உள்ளது. இதையடுத்து 3 முதல் 9 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (55%), வங்காளதேசம் (50%), பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), தென் ஆப்பிரிக்கா (25%), இங்கிலாந்து (19.44%), இலங்கை (0%) உள்ளிட்ட அணிகள் உள்ளன.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.