ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: WTC Points Table after IND-NZ 3rd Test: India lose top spot after series whitewash in Mumbai, Australia first
கடந்த வாரம் புனேவில், பெற்ற வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா (2004), இங்கிலாந்து (2012) ஆகியவற்றுக்குப் பிறகு 21 ஆம் நூற்றாண்டில் (ஜனவரி 1, 2001 முதல்) இந்தியாவில் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்த மூன்றாவது அணியாக மாறியது.
இதன் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு சரிந்தது, 58.33 சதவீத புள்ளிகளாக குறைந்து, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு (62.5) அடுத்த இடத்தில் உள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்ல, மீதமுள்ள ஐந்து ஆட்டங்களில் மற்றொரு தோல்வியை சந்திக்க கூடாது. ஆஸ்திரேலியாவில் ஐந்து வெற்றிகளின் மூலம், இந்தியா 69.29 சதவீத புள்ளிகளுடன் 158 புள்ளிகளுடன் சிறப்பாக முடிக்க முடியும்.
இந்தியா vs நியூசிலாந்து 3வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“