Updated WTC Points Table After West Indies Series Tamil News: 2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
Advertisment
ஆனால், 2வது டெஸ்ட் போட்டிக்கான கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறாததால் போட்டி டிரா ஆனது. இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்தது.
பாகிஸ்தான் அணி 1 ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா (54.17%) 3வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5வது இடத்திலும், இலங்கை (0%) 6வது இடத்திலும் உள்ளன.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil