Advertisment

மீண்டும் நம்பர் 1... WTC தரவரிசையில் ஆஸி.,-யை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் அபார வெற்றியை ருசித்ததை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

author-image
WebDesk
New Update
WTC Points Table India No 1 spot Perth Test Australia Tamil News

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதன் மூலம் முதலிடத்தை இந்தியாஇழந்தது.

ICC World Test Championship 2023-25 Points Table: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: WTC Points Table after Perth Test: India reclaim No. 1 spot with win over Australia in 1st BGT match

இதனைத் தொடர்ந்து, 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்களும், நட்சத்திர விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். இவர்களின் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா 2வது இன்ன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து, 488 ரன்கள் கொண்ட கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர்.

இருப்பினும்,, டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் எடுத்தனர். எனினும், இந்திய பவுலர்கள் தொடர்ந்து சிறப்பாக பவுலிங் போட்ட நிலையில், ஹெட் 89 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 47 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 58.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 238 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அடுத்ததாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது.  

மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறிய இந்தியா 

இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் அபார வெற்றியை ருசித்ததை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டு இருக்கும் நிலையில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை 2-வது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளி, மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. 

முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதன் மூலம் முதலிடத்தை இந்தியாஇழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-

1. இந்தியா - 61.11 சதவீதம்

2. ஆஸ்திரேலியா -57.69 சதவீதம்

3. இலங்கை - 55.56 சதவீதம்

4. நியூசிலாந்து - 54.55 சதவீதம்

5. தென் ஆப்பிரிக்கா - 54.17 சதவீதம்

6. இங்கிலாந்து - 40.79 சதவீதம்

7. பாகிஸ்தான் - 33.33 சதவீதம்

8. வங்காளதேசம் - 27.50 சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 18.52 சதவீதம்

பார்டர்-கவாஸ்கர் டிராபி அட்டவணை

2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா vs இந்தியா, அடிலெய்டு (இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு) டிசம்பர் 6-10, 2024.
3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா vs இந்தியா, பிரிஸ்பேன் (இந்திய நேரப்படி காலை 5:50 மணிக்கு) டிசம்பர் 14-18, 2024. 
4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா vs இந்தியா, மெல்போர்ன் (இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு) டிசம்பர் 26-30, 2024. 
5வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா vs இந்தியா, சிட்னி (இந்திய நேரப்படி காலை காலை 5 மணிக்கு) ஜனவரி 3-7, 2025. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World Test Championship India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment