/indian-express-tamil/media/media_files/2025/01/05/dDSqiOD4rhUJcXWVw5Wd.jpg)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WTC Points Table update: India out of race after Sydney loss, Australia qualify for World Test Championship final vs South Africa
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. குறிப்பாக, டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய காரணத்தினால் இந்திய அணி இந்த வாய்ப்பை இழந்தது.
இந்த சுழற்சியில் 8 தோல்விகளுடன் 52.77 புள்ளிகளில் இருந்து 50 புள்ளிகளாக குறைந்த இந்திய அணி, அட்டவணையில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. மறுபுறம், இதே சுழற்சியில் 11 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி 63.72 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரும் ஜூலை மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை 54-26 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.