/tamil-ie/media/media_files/uploads/2023/08/Bray-Wyatt.png)
முன்னாள் மல்யுத்த வீரர் ப்ரே வியாட் (Bray Wyatt) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
டபிள்யூ டபிள்யூ இ சாம்பியன் வின்தாம் ரோதுன்டா என்ற ப்ரே வியாட் (Bray Wyatt) மாரடைப்பு காரணமாக ஆக.24ஆம் தேதி மரணம் அடைந்தார்.
Just received a call from WWE Hall of Famer Mike Rotunda who informed us of the tragic news that our WWE family member for life Windham Rotunda - also known as Bray Wyatt - unexpectedly passed earlier today. Our thoughts are with his family and we ask that everyone respect their…
— Triple H (@TripleH) August 24, 2023
அவருக்கு வயது 36. இவரின் மரணத்தை டிரிபிள் ஹெச் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். அதில் WWE ஹால் ஆஃப் பேமர் மைக் ரோடுன்டாவிடம் இருந்து டெலிபோன் மூலமாக ப்ரே வியாட் மரணத்தை அறிந்துக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ப்ரே வியாட் அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரர் ஆவார். இவர் இதுவரை 3 முறை மல்யுத்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இவரின் இளவயது மரணம் மல்யுத்த வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தி ராக் உள்ளிட்ட வீரர்கள் அவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தி ராக் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அவரின் மறைவு இதயத்தை நொறுக்கிப்போட்டது. அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள், அன்புகள்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.