‘இவரா போட்டியாளர்?’ – நொந்து போன கர்ட் ஆங்கிள் ரசிகர்கள்! WWE அட்ராசிட்டீஸ்

Kurt Angle to face Baron Corbin in his final Wrestlemania outing

By: Updated: March 19, 2019, 03:49:18 PM

90’ஸ் கிட்ஸின் ரெஸ்ட்லிங் நாயகர்களில் ஒருவர் கர்ட் ஆங்கிள்…. 50 வயதான பழுத்த ரெஸ்ட்லிங் வீரர். விஷயம் இவரைப் பற்றியல்ல…. இவருடன் மோதப் போகும் வீரர் பற்றி!.

கர்ட் ஆங்கிள், ரெஸ்ட்லிங் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். எதிர்வரும் WrestleMania தொடரோடு அவர் ஓய்வுப் பெறவிருக்கிறார். இதனால், யாருடன் அவர் மோதப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரெஸ்ட்லிங் ரசிகர்களிடையே நிலவியது.

பொதுவாக, ஒரு மூத்த ஜாம்பவான் வீரர் கடைசிப் போட்டியில் ஆடுகிறார் என்றால், எதிராளி அவரை விட பயங்கரமானவராக இருப்பார். ரசிகர்களும் அதைத் தான் விரும்புவார்கள். இதற்கு முன்னதாக, ஸ்டோன் கோல்ட் தனது கடைசிப் போட்டியை ராக்-குடனும், ரிக் ஃபிளேர் தனது கடைசிப் போட்டியை ஷான் மைக்கேல்ஸுடனும் மோதி தங்களது இறுதிப் போட்டியை நிறைவு செய்தனர். ஆகையால், கர்ட் ஆங்கிளின் எதிராளி என்பது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு தற்போது கர்ட் ஆங்கிள் விடையளித்துள்ளார்.

அவர், பாரோன் கார்பின்.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, ரசிகர்கள் வெளியேக் கூட சொல்ல முடியாத அளவிற்கு WWE-ஐ பாராட்டி வருகின்றனர். WWE சொல்லித்தான் கர்ட் ஆங்கிள், தனது எதிராளியை தேர்வு செய்திருக்க முடியும் என்றாலும், கர்ட் ஆங்கிளையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் இருமுறை தங்கப் பதக்கம் வென்ற கர்ட் ஆங்கிளுக்கு, இதைவிட என்ன அவமானம் இருக்க முடியும் என்ற ரீதியில் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு கார்பின் அளித்துள்ள ரிப்ளை தான் ஹைலைட்…. “உங்கள் கடைசிப் போட்டியில் உங்களை அடக்கி ஆளப்போவது சரியாக இருக்காது என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Wwe raw kurt angle announces his wrestlemania opponent baron corbin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X