இஸ்லாமியருக்கு எதிராக சர்ச்சை பதிவு: மன்னிப்பு கோரிய யாஸ் தயாள்
இன்ஸ்டாகிராமில் சர்ச்சை பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய குஜராத் வீரர் யாஷ் தயாள், தவறுதலாக பதிவிட்டு விட்டதாகவும், எல்லா மதம் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Yash Dayal's Instagram post controversy Tamil News: ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார். இவர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் யாஷ் தயாளை கடுமையாக விமர்சித்தனர்.
Advertisment
அவர் அந்த பதிவில் இஸ்லாமியர் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டும், 'லவ் ஜிகாத்' என்று வார்த்தையையும் பயன்படுத்தி இருந்தார். இது ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரை சமூக ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய யாஷ் தயாள், மன்னிக்கவும், அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன். வெறுப்பை பரப்ப வேண்டாம். அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிராக யாஷ் தயாள் வெறுப்பை வெளிப்படுத்திய பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A @BCCI Uttar Pradesh and @gujarat_titans player, Yash Dayal, posted this on Instagram. He has since deleted it.
- No action against him? - Hasn't he let down his Muslim teammates? - How does team management work out with a bigoted individual in a team sport? pic.twitter.com/Q4WeYO7XqD
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தான் இந்த யாஷ் தயாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil