India vs England, 2nd Test | Yashasvi Jaiswal: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வத இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இரட்டை சதம் அடித்து மிரட்டிய தொடக்க வீரரும் இளம் வீரருமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தது மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதில், இந்திய அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்களில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1. கருண் நாயர் - 3 இன்னிங்ஸ்
2.வினோத் காம்ப்ளி - 4 இன்னிங்ஸ்
3. சுனில் கவாஸ்கர்/ மயங் அகர்வால் - 8 இன்னிங்ஸ்
4. புஜாரா - 9 இன்னிங்ஸ்
5. ஜெய்ஸ்வால் - 10 இன்னிங்ஸ்
ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1. வினோத் காம்ப்ளி - 21 வருடங்கள் 35 நாட்கள்
2. வினோத் காம்ப்ளி - 21 வருடங்கள் 55 நாட்கள்
3. சுனில் கவாஸ்கர்- 21 வருடங்கள் 283 நாட்கள்
4. ஜெய்ஸ்வால் - 22 வருடங்கள் 37 நாட்கள்
ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் சவுரவ் கங்குலி முதலிடத்திலும், வினோத் காம்ப்ளி ( 2 முறை) மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் 2ம் மற்றும் 3ம் இடத்தில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“